Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பழைய தங்கத்தை விற்கப்போறீங்களா? இந்த 3 விஷயங்கள் கட்டாயம்!

Know Your Gold Value: தங்கம் என்பது சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. அதனால் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில் தங்கத்தை விற்க மற்றும் அடகு வைக்கும் முன் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பழைய தங்கத்தை விற்கப்போறீங்களா? இந்த 3 விஷயங்கள் கட்டாயம்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 20 Apr 2025 16:58 PM

தங்கம் (Gold) என்பது மிகப்பெரும் முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம் இதன் மதிப்பும் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.50,000 ஆக இருந்த தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் ரூ.20,000 அதிகரித்து ரூ.70,000 ஆக விற்கப்படுகிறது. அட்சய திருதியை விரைவில் வரவிருக்கிற நிலையில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர். அட்சய திருதியை (Akshaya Tritiya) அன்று தங்கம் வாங்கினால் நம்மிடையே உள்ள தங்கம் பெரும் என நம்பப்படுகிறது. மேலும் பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு காரணம் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல் ஏற்படும்போது நம்மிடையே உள்ள தங்கம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை தான். தேவைப்படும் நேரத்தில் நம்மிடத்தில் உள்ள தங்கத்தை விற்றோ, அடகு வைத்தோ பணம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அந்த நேரத்தில் நம்மிடையே உள்ள நகை 24 கேரட்டா, 916 கேடிஎம் கோல்டு ரேட் கொண்டதா என ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகும்.

இந்த நிலையில் வீட்டில் இருக்கும் பழைய தங்க நகைகளை விற்று பணமாக மாற்றுவது எப்படி? ஹால் மார்க் இல்லாத நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்கலாமா? நம் நகைக்கு சரியான விலை கிடைக்குமா?  என்பவை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பழைய தங்கத்தின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?

பழைய நகைகள் இரண்டு முறைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. முதலில் கேரட் மீட்டர் மெஷின் (Carat Meter) மூலம் நகையை ஸ்கேன் செய்வார்கள். இதில் நகையில் எத்தனை கேரட் தங்கம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த மெஷின் 60 விநாடிகளில் நகையின் தூய்மை மட்டும் அல்ல, அதில் கலந்து உள்ள மற்ற உலோகங்களின் சதவிகிதத்தையும் காட்டும்.

ஹால் மார்க் இல்லாத நகைகளை விற்க முடியுமா?

இப்போதெல்லாம் BIS (Bureau of Indian Standards) ஹால் மார்க் இல்லாத தங்க நகைகளை விற்க முடியாது. நம்மிடம் பழைய ஹால் மார்க் இல்லாத நகை இருந்தால் பக்கத்தில் உள்ள ஹால் மார்கிங் சென்டரில் சென்று, நகையை சோதனை செய்ய வைத்து, ரூ.35 முதல் ரூ.200 வரை கட்டணத்தில் ஹால் மார்க் பெற்று கொள்ளலாம்.

தங்கத்தின் தூய்மை: கேரட் அடிப்படையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

தங்க நகைகளின் தூய்மை அதன் கேரட் (Carat) அளவின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. கேரட் என்பது தங்கத்தில் எவ்வளவு தூய தங்கம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அளவுகோல். ஒரு நகையின் கேரட் அளவு அதிகமானால், அதில் தூய தங்கம் அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. 24 கேரட் என்பது 100 சதவிகிதம் தூய தங்கமாகக் கருதப்படுகிறது. இதில் பிற உலோகங்கள் எந்த அளவிலும் கலக்கப்படாது. ஆனால், இது மிக மென்மையானதாக இருப்பதால், நகைகள் செய்வதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படாது.

மேலும் 22 கேரட் என்பது சுமார் 91.6% தூய தங்கமாக கருதப்படுகிறது. மீதமுள்ள 8.3% தாமிரம், வெள்ளி போன்ற பிற உலோகங்கள் கலந்து இருக்கும். இது நகை தயாரிப்புகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது உறுதியும், நல்ல விலை மதிப்பும் கொண்டது.

புதிதாக நகை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

நகைகள் வாங்கும்போது பில் கண்டிப்பாக வாங்க வேண்டும். அதில் தூய்மை, Gross weight, Net weight போன்றவை தெளிவாக இருப்பதால், விற்பதோ, மாற்றுவதோ எளிதாக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் செய்யலாமா? விற்கலாமா? என்பதெல்லாம் உங்கள் தேவையைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!...
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...