Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்.. 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

Interest Rate for Senior Citizen Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்.. 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

மாதிரி புகைப்படம்

Published: 

26 Apr 2025 12:31 PM

சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய விரும்பும் பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக இருப்பது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டம் தான். காரணம், இந்த திட்டம் பாதுகாப்பாக வருமானத்தை வழங்குகிறது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தில் எந்தவித நிதி இழப்பும் ஏற்படாது என்பதால் பலரும் இதனை தேர்வு செய்கின்றனர். நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொறுத்தவரை மூத்த குடிமக்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு வழங்கப்படுவதை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும். இதன் மூலம் பொது குடிமக்களை விடமும், மூத்த குடிமக்களால் இந்த திட்டத்தில் அதிக பலன்களை பெற முடியும்.  நிலையான வைப்பு நிதி திட்டம்  இவ்வாறு மூத்த குடிமக்களுக்கு பல சிறப்புகளை வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்களுக்கான FD – 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்

ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 8.55 சதவீதம் வரை வட்டியும் வழங்குகிறது.

இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (ESA Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் வரை வட்டியும் வழங்குகிறது.

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 8.60 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டியும் வழங்குகிறது.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 8.60 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டியும் வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.