Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்.. 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

Interest Rate for Senior Citizen Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்.. 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 26 Apr 2025 12:31 PM

சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய விரும்பும் பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக இருப்பது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டம் தான். காரணம், இந்த திட்டம் பாதுகாப்பாக வருமானத்தை வழங்குகிறது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தில் எந்தவித நிதி இழப்பும் ஏற்படாது என்பதால் பலரும் இதனை தேர்வு செய்கின்றனர். நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொறுத்தவரை மூத்த குடிமக்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு வழங்கப்படுவதை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும். இதன் மூலம் பொது குடிமக்களை விடமும், மூத்த குடிமக்களால் இந்த திட்டத்தில் அதிக பலன்களை பெற முடியும்.  நிலையான வைப்பு நிதி திட்டம்  இவ்வாறு மூத்த குடிமக்களுக்கு பல சிறப்புகளை வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்களுக்கான FD – 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்

ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 8.55 சதவீதம் வரை வட்டியும் வழங்குகிறது.

இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (ESA Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் வரை வட்டியும் வழங்குகிறது.

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 8.60 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டியும் வழங்குகிறது.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank) பொது குடிமக்களுக்கு 8.60 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டியும் வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

தனுஷின் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஓவர்!
தனுஷின் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஓவர்!...
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?...
சிறந்த நடிகர் சூர்யாவா? சிவகார்த்திகேயனா? - பிரியங்கா மோகன்!
சிறந்த நடிகர் சூர்யாவா? சிவகார்த்திகேயனா? - பிரியங்கா மோகன்!...
கார் லோன் வாங்க சிறந்த வங்கிகள் எது? எப்படி தேர்ந்தெடுப்பது?
கார் லோன் வாங்க சிறந்த வங்கிகள் எது? எப்படி தேர்ந்தெடுப்பது?...
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!...
திருச்சி புளியஞ்சோலை அருவி: இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம்
திருச்சி புளியஞ்சோலை அருவி: இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம்...
நாங்கள் நலமுடன் இருக்கிறோம் - கொல்லப்பட்டதாக கூறப்படும் தம்பதி!
நாங்கள் நலமுடன் இருக்கிறோம் - கொல்லப்பட்டதாக கூறப்படும் தம்பதி!...
சமந்தா குறித்து பேசிய பிரபல பெண் இயக்குநர்
சமந்தா குறித்து பேசிய பிரபல பெண் இயக்குநர்...
குஷியில் ரசிகர்கள்.. நடிகர் கவின் கிஸ் படத்தின் நியூ அப்டேட்!
குஷியில் ரசிகர்கள்.. நடிகர் கவின் கிஸ் படத்தின் நியூ அப்டேட்!...
இனி ஆதார் இல்லாமல் UAN உருவாக்கலாம் - EPFO-ன் புதிய அம்சம்!
இனி ஆதார் இல்லாமல் UAN உருவாக்கலாம் - EPFO-ன் புதிய அம்சம்!...
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி...