Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fixed Deposit : அதிக வட்டி விகிதம் கொண்ட FD திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.. அப்போ இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!

Fixed Deposit Schemes with More than 9% Interest | பெரும்பாலான மக்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னர் அவற்றின் வட்டி விகிதத்தை செக் செவது அவசியம் ஆகும். அந்த வகையில் எஃப்டி திட்டங்களுக்கு 9 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Fixed Deposit : அதிக வட்டி விகிதம் கொண்ட FD திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.. அப்போ இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!
Fixed Deposit Schemes (1)
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 27 Apr 2025 23:14 PM

சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய விரும்பும் பெரும்பாலான பொது மக்களுக்கு முதன்மை தேர்வு ஆக இருப்பது எஃப்டி (FD – Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் தான். இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை தருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகளும் இந்த நிலையான வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. நிலையான வைப்புநிதி திட்டங்களை பொறுத்தவரை அதிக வட்டியுள்ள திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும். இந்த நிலையில் நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சுமார் 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்த விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டம் – 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank) 1001 நாட்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு அந்த வங்கி 9.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank) 1500 நாட்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு அந்த வங்கி 9.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

சூர்யோதேய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யோதேய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank) 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு அந்த வங்கி 9.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank) 2 முதல் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு அந்த வங்கி 8.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank) 888 நாட்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு அந்த வங்கி 8.55 சதவீதம் வட்டி வழங்குகிறது.

மேற்குறிப்பிட்ட இந்த 5 நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

கஞ்சா வழக்கில் ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசியிடம் விசாரணை
கஞ்சா வழக்கில் ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசியிடம் விசாரணை...
ஐபிஎல் 2025ல் மும்பை பட்டம் வெல்வது உறுதி! ஏன் தெரியுமா?
ஐபிஎல் 2025ல் மும்பை பட்டம் வெல்வது உறுதி! ஏன் தெரியுமா?...
செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவது நல்லதா? இதை செய்யவேக்கூடாது!
செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவது நல்லதா? இதை செய்யவேக்கூடாது!...
பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!
பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!...
தனது கனவுத் திட்டத்தில் நானி நடிப்பதை உறுதி செய்த ராஜமௌலி
தனது கனவுத் திட்டத்தில் நானி நடிப்பதை உறுதி செய்த ராஜமௌலி...
வைட்டமின் K-வின் முக்கியத்துவம் மற்றும் சேர்க்க வேண்டிய 7 உணவுகள்
வைட்டமின் K-வின் முக்கியத்துவம் மற்றும் சேர்க்க வேண்டிய 7 உணவுகள்...
மதங்களை கடந்த மாரியம்மன் அன்பு.. இந்த கோயிலின் சிறப்பு தெரியுமா?
மதங்களை கடந்த மாரியம்மன் அன்பு.. இந்த கோயிலின் சிறப்பு தெரியுமா?...
பத்மபூஷன் விருது வாங்க குடும்பத்துடன் டெல்லி சென்ற அஜித் குமார்
பத்மபூஷன் விருது வாங்க குடும்பத்துடன் டெல்லி சென்ற அஜித் குமார்...
தமிழகத்தில் கத்திரி வெயில் எப்போது முதல் தொடக்கம்..?
தமிழகத்தில் கத்திரி வெயில் எப்போது முதல் தொடக்கம்..?...
முருகேசன் - கண்ணகி ஆணவ கொலை - 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!
முருகேசன் - கண்ணகி ஆணவ கொலை - 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!...
பல்லாவரம் டூ பான் இந்தியா... நடிகை சமந்தாவிற்கு ஹேப்பி பர்த்டே!
பல்லாவரம் டூ பான் இந்தியா... நடிகை சமந்தாவிற்கு ஹேப்பி பர்த்டே!...