Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fixed Deposit : FD திட்டங்களுக்கு 8.55% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

High Yield FD Scheme | இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மூத்த குடிமக்களுக்கான எஃப்டிகளுக்கு 8.55 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Fixed Deposit : FD திட்டங்களுக்கு 8.55% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 28 Mar 2025 18:44 PM

இந்தியாவில் உள்ள பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை (FD – Fixed Deposit) செயல்படுத்தி வருகின்றன. நிலையான வைப்பு நிதி திட்டங்கள் பாதுகாப்பான பொருளாதாரத்தை கட்டமைக்கும் சிறப்பான திட்டமாக கருதப்படும் நிலையில், பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். மற்ற முதலீட்டு திட்டங்களை விடவும் நிலையான வைப்பு நிதி திட்டம் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. காரணம், இந்த திட்டத்தில் எந்த வித நஷ்டமும் ஏற்படாது.

நிலையான வைப்பு நிதி திட்டம் எவ்வாறு செயல்படும்?

நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொருத்தவரை முதலீடு செய்யும் நபர்கள் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து அதில் முதலீடு செய்ய வேண்டும். நிலையான வைப்பு நிதி திட்டத்தில் மொத்தமாக தான் முதலீடு செய்ய வேண்டும். உதாரனமாக நீங்கள் 5 ஆண்டு கால அளவீடு கொண்ட திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்த திட்டத்தின் வட்டி விகிதத்தை கணக்கில் கொண்டு திட்டத்தின் முடிவில் நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக வழங்கப்படும்.

FD திட்டங்களுக்கு 8.55 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்

நிலையான வைப்பு நிதி திட்டங்கள் எந்த வித ஆபத்துக்களும் அற்ற, நிதி இழப்புகளும் ஏற்படுத்தாத திட்டம் என்பதால் பலரும் இவற்றில் ஆர்வத்துடன் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.55 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

  • ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • பந்தன் வங்கி (Bandhan Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.55 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • சிட்டி யூனியன் வங்கி (City Union Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • டிசிபி வங்கி (DCB Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • டிபிஎஸ் வங்கி (DBS Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • தனலட்சுமி வங்கி (Dhanalaxmi Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஐடிபிஐ வங்கி (IDBI Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஐடிஎஃப்சி வங்கி (IDFC Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.40சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஆர்பிஎல் வங்கி (RBL Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • யெஸ் வங்கி (Yes Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

வடக்கு பார்த்த வீட்டில் பின்பற்ற வேண்டிய வாஸ்து டிப்ஸ்!
வடக்கு பார்த்த வீட்டில் பின்பற்ற வேண்டிய வாஸ்து டிப்ஸ்!...
பெர்சனல் லோனுக்கு குறைந்த வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள் !
பெர்சனல் லோனுக்கு குறைந்த வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள் !...
பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்ற இந்தியா!
பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்ற இந்தியா!...
டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்!
டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்!...
ஜெயிலர் 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளாரா?
ஜெயிலர் 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளாரா?...
உங்கள் EPFO கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணம் என்ன ?
உங்கள் EPFO கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணம் என்ன ?...
புற்று மண்ணில் உருவான மாரியம்மன்.. புன்னைநல்லூர் கோயில் ஸ்பெஷல்!
புற்று மண்ணில் உருவான மாரியம்மன்.. புன்னைநல்லூர் கோயில் ஸ்பெஷல்!...
சுந்தர் சி-யின் ‘கேங்கர்ஸ்’ படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா?
சுந்தர் சி-யின் ‘கேங்கர்ஸ்’ படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா?...
அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!...
அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?
அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?...
”பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது" பிரதமர் மோடி!
”பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது