3 ஆண்டுகளுக்கான FD.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!
7 Banks Offers Highest Interest Rates | பெரும்பாலான மக்களுக்கு சேமிக்க முதன்மை முதலீட்டு திட்டமாக உள்ளது நிலையான வைப்பு நிதி திட்டம் தான். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெற முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் அதில் முதலீடு செய்து வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
எதிர்கால தேவைகளுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். காரணம், நிதி சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை சந்திக்க முடியாமல் போய்விடும். இந்த நிலையில், சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்த பொதுமக்கள் சிலர் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இவ்வாறு சேமிக்க தொடங்கும் பொதுமக்களின் முதன்மை தேர்வாக இருப்பது நிலையான வைப்பு நிதி திட்டம் தான். இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
3 ஆண்டுகளுக்கான எஃப்டி திட்டம் – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் 7 வங்கிகள் எவை, அவை எவ்வளவு வட்டி வழங்குகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
எஸ்பி வங்கி
எஸ்பிஐ (SBI – State Bank of India) 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி (HDFC Bank) வங்கி 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி
பேங்க் ஆஃப் பரோடா வங்கி (Bank of Baroda) 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.15 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
ஐடிஎஃப்டிசி வங்கி
ஐடிஎஃப்சி வங்கி (IDFC Bank) 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.8 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.7 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.