பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி – வரியைத் தவிர்க்க செம பிளான்
Secrets of wealthy people: பணக்காரர்கள் நிறைய கடன் வாங்குவதாக செய்திகளில் படித்திருப்போம். அவர்களுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதால் கடன் வாங்குவதில்லை. கடன் வாங்குவதை ஒரு யுக்தியாக பயன்படுத்துகிறார்கள். பணக்காரர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள், அதற்கு பின்னால் உள்ள காரணத்தை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதிரி படம்
பெரிய பெரிய பணக்காரர்களுக்கு இவ்வளவு கடன் (Loan) என அடிக்கடி செய்திகளில் அடிக்கடி படித்திருப்போம். அவர்களால் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை என அவர்களது சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் செய்திகள் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு பெரிய பணக்காரர்களா இருக்கிறார்கள், இவர்களுக்கு எப்படி இவ்வளவு கடன் இருக்க முடியும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதற்காக அவர்கள் முடங்கிப்போவதில்லை. காரணம் அவர்கள் கடன் வாங்குவதை தந்திரமாக பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் பெற்று அந்த கடன் மூலம் புதிய தொழில் (Business) தொடங்குவார்கள். இதனால் அவர்களுக்கு அந்த தொழில் தொடங்க பணமில்லாமல் இல்லை. அவர்களிடம் போதிய பணம் இருக்கும். ஆனால் வேறு காரணத்துக்காக அவர்கள் கடன் வாங்குவார்கள்.
ஒரு பக்கம் கடனாளியாக இருக்கும் நபர்கள் புதிய வீடுகள், கார்கள், இடங்களை வாங்குவதை பார்க்க முடியும். எப்படி ஒரு பக்கம் தத்தளிக்கும் இவர்களால் இப்படி புதிதாக சொத்துக்களை வாங்க முடிகிறது என்ற கேள்வி நம்மில் பெரும்பாலானோருக்கு தோன்றியிருக்கும். காரணம் அவர்கள் கடன் வாங்குவதை ஒரு ஸ்மார்ட்டான யுக்தியாக பயன்படுத்துகிறார்கள். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பணக்காரர்கள் பின்பற்றும் மூன்று முக்கிய நிதி கொள்கைகள்:
ஒரு பொருளையோ இடத்தையோ குறைந்த விலையில் வாங்கி, அதிக விலையில் விற்பது தான் பொருளாதார ரீதியாக ஸ்மார்டான செயல். ஆனால் அதனால் ஏற்படும் லாபத்திற்கு வருமான வரி மற்றும் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். இந்த நிலையைத் தவிர்க்க, பணக்காரர்கள் வேறொரு வழியைத் தேர்வுசெய்கிறார்கள். குறைந்த விலையுள்ள சொத்தை வாங்குகிறார்கள்.அதனை அடமானம் வைத்து பெரிய கடன் பெறுகிறார்கள். அந்த சொத்தை ஒருபோதும் விற்காமல் வைத்திருக்கிறார்கள்.
இந்த யுக்தி எப்படி வேலை செய்கிறது?
ஒரு சொத்தை வாங்கும் போது, அதன் மதிப்பு காலப்போக்கில் உயர்கிறது. அந்த சொத்தை விற்காமல், அதன் மீது கடன் பெறுகிறார்கள். அந்தக் கடன் மூலம் பணத்தை மற்ற முதலீடுகளில் செலுத்தி, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை கடனை அடைக்கப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும், அவர்கள் அந்த முதலீடுகளுக்காக எடுத்த கடனுக்குச் சமமான ஒரு ஆயுள் காப்பீடு (life insurance) எடுக்கிறார்கள். அவர்கள் உயிரிழந்த பிறகு, காப்பீட்டுத் தொகை கடனை அடைக்க உதவுகிறது. சொத்துக்கள் எந்த வரியும் இல்லாமல் அடுத்த தலைமுறைக்கு செல்கின்றன. இந்த முறை முழுவதும் வரி கட்ட வேண்டிய அவசியமே இல்லை. காரணம், கடனுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் எப்போதும் கடனில் இருந்தாலும் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள். சமீபத்திய ஒரு ஆய்வின்படி, பணக்காரர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அதற்கேற்ப குறைவாகவே வரி செலுத்துகிறார்கள். இதற்கே காரணம் இந்த மாஸ்டர் ப்ளான்.
கவனிக்க வேண்டியவை:
இந்த யுக்தி சிலருக்கு கைகொடுக்கலாம். ஆனால் கடனுக்கான வட்டி மற்றும் கூட்டு வட்டியைக் கவனித்துப் பின்னர் முதலீட்டு முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)