9 ஏர்பேக்குகள்.. 360 டிகிரி கேமரா.. அசத்தலான அம்சங்களுடன் ஸ்கோடா கோடியாக் கார்!

Skoda Kodiaq 2025: இந்த புதிய எஸ்யூவி கார் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த முழு அளவிலான எஸ்யூவியில் நிறுவனம் 9 ஏர்பேக்குகளை கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கோடாவிலிருந்து இந்தப் புதிய எஸ்யூவியின் வருகையானது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் போன்ற வாகனங்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

9 ஏர்பேக்குகள்.. 360 டிகிரி கேமரா.. அசத்தலான அம்சங்களுடன் ஸ்கோடா கோடியாக் கார்!

ஸ்கோடா கொடியாக் கார்

Published: 

17 Apr 2025 12:17 PM

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) இந்தியா தனது இரண்டாம் தலைமுறை 2025 ஸ்கோடா கோடியாக்கை (Skoda Kodiaq) இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. மாறுபட்ட ஏழு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய முழு அளவிலான SUV கார் ஸ்கோடா நிறுவனத்தால் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஸ்போர்ட்லைன், மற்றொன்று L&K. இந்த SUV காரின் விலை என்ன, இந்த காரில் என்ன எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது, இந்த கார் மற்ற கார்களை விட லேட்டஸ்ட் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? என்பது தொடர்பான விரிவான தகவல்களை நாம் இங்கு காணலாம்.

வடிவமைப்பு மற்றும் இயந்திர விவரங்கள்

ஸ்கோடா கோடியாக் 2025 மாடலில்  7 வேக DCT தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் வரும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த எஞ்சின் 201 bhp பவரையும்,  320Nm டார்க்கையும் உருவாக்குகிறது. வடிவமைப்பைப் பற்றி சொல்ல வேண்டுமானால், புதிய பம்பர்கள், LED ஹெட்லேம்ப்கள், 18-இன்ச் அலாய் வீல்கள், C-வடிவ LED டெயில்லைட்கள்   போன்ற மாற்றங்கள் இந்த SUV காரில் நாம் காணலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரை வடிவமைக்கும் போது ஸ்கோடா வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முழுமையாக கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு அளவிலான எஸ்யூவி காரில் 9 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 9 ஏர்பேக்குகளைத் தவிர, 360 டிகிரி வியூ கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆன்டி-பிரேக்கிங் சிஸ்டம், ஈபிடி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டெசென்ட் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களும்  சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா கோடியாக் சிறப்புகள்

இந்த காரில் 12.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, மூன்று மண்டல காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு, பனோரமிக் சன்ரூஃப், முன் இருக்கைகளில் வெப்பமாக்கல் மற்றும் காற்றோட்ட அமைப்பு, மசாஜ் செயல்பாடு, சறுக்கும் மற்றும் சாய்ந்த நிலையிலான இரண்டாவது வரிசை இருக்கை, சப் வூஃபர் கொண்ட பிரீமியம் 13 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் போன்ற சமீபத்திய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

2025 இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை

இந்த காரின் ஸ்போர்ட்லைன் வேரியண்டின் விலை ரூ.46.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காரின் L&K வகை  ரூ.48.69 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடாவிலிருந்து இந்த புதிய முழு அளவிலான எஸ்யூவியின் சந்தை நுழைவு டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் போன்ற வாகனங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.