SIP-ல் மாதம் ரூ.10, 000 முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் ரூ.9.79 கோடி – எப்படி தெரியுமா?
Systematic Investment Plan: சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நமக்கு லாபமாக ரூ.9.79 கோடி கிடைக்கும். இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது நமக்கு கிடைக்கும் லாபம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சிப் (SIP) என்பது Systematic Investment Plan என்பதின் சுருக்கம். இது மியூச்சுவல் ஃபண்டுகளில் (Mutual Fund) ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை, அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலங்களுக்கு முதலீடு செய்யும் ஒரு முறை. இந்த திட்டத்தில் நீண்ட காலத்தில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. முதலீடு செய்த தொகை காலப்போக்கில் அதிரடியாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் குறைவான தொகையை முதலீடு செய்தாலும், குறிப்பிட்ட காலத்தில் நமது முதலீட்டுத் தொகை உயரும். சந்தையின் மாறுதல்களைப் பற்றி கவலைப்படாமல் நீண்ட கால லாபத்தை மனதில் வைத்து முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. இதனால் எதிர்காலத்தில் நிதி நெருக்கடி ஏற்படாமல் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரேமுறை முதலீடு செய்வதோ அல்லது சிஸ்டமாடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் போன்ற திட்டங்களை பயன்படுத்தினால் எதிர்கால செலவுகளை எளிதாக சமாளிக்கலாம். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஒருவர் SIP (Systematic Investment Plan) திட்டத்தில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு தோராயமாக ஆண்டுக்கு 12 சதவிகிதம் லாபம் கிடைத்தால், 20 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.24,00,000 என்ற தொகை கிடைக்கும். மேலும், 12 சதவிகிதம் வருடாந்திர லாபத்துடன் 20 ஆண்டுகளில் முதலீடு செய்யும் தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ.91,98,574 கிடைக்கும். அதேபோல், தொடர்ந்து SIP-ல் மாதம் ரூ.10,000 முதலீடு செய்து 40 ஆண்டுகள் வரை திட்டத்தை நீட்டித்தால், மொத்தம் லாபம் ரூ.48,00,000 அதிகரித்து 40 ஆண்டுகளில் அவருக்கு ரூ.9,79,30,710 கிடைக்கும். முதலீடு தொடங்கியதிலிருந்து, குறிப்பிட்ட காலத்தில் வருமானம் 10 மடங்கு அதிகரித்திருப்பதை நீங்கள் காணலாம்.
ஒரே முறை மொத்தமாக முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம்?
ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதற்கு பதிலாக அவர் மொத்தமாக ஒரு பெரிய தொகையை முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். உதாரணமாக அவர் ஒரு முறை ரூ.5 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டால், 20 ஆண்டுகளில் 12% வருடாந்திர லாபம் கிடைக்கும் எனில், மொத்த கார்ப்பஸ் ஃபண்ட் ரூ.48,23,147 ஆக இருக்கும். அதாவது, அவரது முதலீட்டுத் தொகையுடன் சேர்த்து 12% லாபத்துடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ரூ.4,65,25,485 லாபம் கிடைக்கும்.
சிஸ்டமாட்டிக் விட்த்ரால் பிளான் என்றால் என்ன?
சிஸ்டமாட்டிக் விட்த்ரால் பிளான் (Systematic Withdrawal Plan) என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து ஒழுங்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை எடுத்துக்கொள்ளும் முறையாகும். இது முதலீட்டாளர்களுக்கு அவர்களது முதலீடுகளிலிருந்து நிலையான மாதாந்திர வருமானத்தை பெற உதவுகிறது.
இதுவே, பதவி ஓய்வு பெறுவதற்குத் தயார் ஆவதற்காக அல்லது ஏற்கனவே மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்திருக்கும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்த மூலதனத்தின் ஒரு பகுதியாகவும், அந்த முதலீட்டாளரின் சம்பாதித்த லாபத்தின் ஒரு பகுதியாகவும் ரூ.10,000 எடுத்துக் கொள்வீர்கள் எனில், அந்த 10,000-இல் உங்கள் முதன்மை தொகையின் (principal) பங்கும், சம்பாதித்த லாபத்தில் உங்கள் பங்கும் உங்களுக்கு கிடைக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)