ஓய்வு காலத்தில் ரூ.1 கோடி பெற வேண்டுமா?.. அப்போது இந்த முறையை பின்பற்றி முதலீடு செய்யுங்கள்!
Retirement Plan to Achieve 1 Crore | முதிர்வு காலத்தில் நிதி பற்றாக்குறை ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பாக இருக்க இளமை காலத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில், ஓய்வுக்கு பிறகு ரூ.1 கோடி பெற எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் சமீப காலமாகவே ஓய்வு காலத்தை (Retirement Phase) திட்டமிடும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தனியார் துறைகளில் பணிபுரிவது, சுயதொழில் செய்வது என வருமானத்தை ஈட்டி வரும் நிலையில், அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காது.
ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக கட்டமைக்க உதவு திட்டம்
இந்த நிலையில் தான், ஓய்வுக்கு பிந்தைய காலத்தை பொருளாதார பாதுகாப்பு மிக்கதாக கட்டமைக்கும் வகையில் பெரும்பாலான இளைஞர்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இளமை காலத்திலே முதலீடு செய்யும் பட்சத்தில், அது ஓய்வு காலத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றும். இதற்காக பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதிர்வு காலத்தில் ரூ.1 கோடி வரை நிதியை பெருவதற்கு வழிவகை செய்யும் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போது 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய ஓய்வு காலத்தை திட்டமிடுவதற்காக எந்த வித நிதியையும் சேமிக்க தொடங்கவில்லை என்றால், அடுத்த 15 ஆண்டுகளுக்குள் ஓய்வு காலத்திற்கான தொகையை எவ்வாறு பெறுவது, எந்த முறையில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை தரும் என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதிர்வு காலத்தில் ரூ.1 கோடி பெறுவது எப்படி? – எவ்வாறு சேமிக்க வேண்டும்?
முதிர்வு காலத்தில் ரூ.1 கோடி பெற நீங்கள் மாதம் தோறும் ரூ.13,000 சேமிக்க தொடங்க வேண்டும். பிறகு ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத தொகையை அதிலிருந்து அதிகரித்து முதலீடு செய்ய வேண்டும். அதாவது முதலாம் ஆண்டு மாதம் தோறும் ரூ.13,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் அடுத்த ஆண்டு அதில் இருந்து 10 சதவீதம் அதாவது ரூ.1,300 அதிகரித்து ரூ.14,300 ஆக முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டு நீங்கள் முதலீடு செய்த தொகையில் இருந்து 10 சதவீத தொகையை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். இப்படியாக நீங்கள் 55 வயது வரை அதாவது சுமார் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தொடர் வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டம் எதை வேண்டுமானாலும் இதற்காக தேர்வு செய்யலாம். ஆனால், நீங்கள் தேர்வு செய்யும் திட்டம் 11 சதவீதம் வரை வட்டி கொடுக்க கூடிய திட்டமாக இருக்க வேண்டும்.
15 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேமிக்கலாம்
இந்த முறையை பயன்படுத்தி முறையாக நீங்கள் முதலீடு செய்து வரும் பட்சத்தில் உங்களது 55வது வயதில் உங்களிடம் ரூ.1 கோடி இருக்கும். பின்னர் அந்த தொகையை நல்ல லாபம் தரக்கூடிய வேறு ஏதேனும் ஒரு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். இதன் மூலம் மாதம் மாதம் உங்களுக்கு செலவுக்கு தேவையான பணமும் கிடைக்கும், நீங்கள் சேமித்த ரூ.1 கோடி பணமும் நிதி பாதுகாப்பை வழங்கும் விதமாக பாதுகாப்பாக இருக்கும்.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.