Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எஸ்பிஐ சேமிப்பு திட்டம்: ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ரூ.32,044 வட்டி – விண்ணப்பிப்பது எப்படி?

SBI Savings Scheme: தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து நல்ல வருமானம் பெற நினைப்பவர்களுக்கு பிக்சட் டெபாசிட் என்பது நல்ல தேர்வாக கருதப்படுகிறது.  அந்த வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வழங்கும் ஒரு சிறப்பு சேமிப்பு திட்டத்தில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ரூ. 32,044 வரை நிலையான வட்டியைப் பெற முடியும்.

எஸ்பிஐ சேமிப்பு திட்டம்: ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ரூ.32,044 வட்டி – விண்ணப்பிப்பது எப்படி?
எஸ்பிஐ சேமிப்பு திட்டம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 09 Apr 2025 16:30 PM

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு  நிதி நிலைத்தன்மை என்பது மிகவும் அவசியம். வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் பணத் தேவை வரலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இப்படியான நேரங்களில் சேமிப்பு ஒன்றுதான் மக்களுக்கு பெரும்பாலான நேரங்களில் கைகொடுத்து வருகிறது. மேலும் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு(Investment ) செய்வதும் நமக்கு உதவும்.  எதிர்காலத்தில் திடீரென வரும் அவசர செலவுகளும், தேவைகளும் சேமிப்பின் மூலம் சீராக நிர்வகிக்க முடிகிறது.  தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து நல்ல வருமானம் பெற நினைப்பவர்களுக்கு பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)  என்பது நல்ல தேர்வாக கருதப்படுகிறது.  அந்த வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(State Bank of India ) வழங்கும் ஒரு சிறப்பு சேமிப்பு திட்டத்தில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ரூ. 32,044 வரை நிலையான வட்டியைப் பெற முடியும்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதலீடு செய்தவற்கு பல சிறந்த திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் (SBI Fixed Deposit) என்ற திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ.32, 044 கிடைக்கிறது. ஏப்ரல், 2025ன் படி இந்த திட்டத்தில் பொது மக்களுக்கு ஆண்டுக்கு 6.50 முதல் 7 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இரண்டு வருடங்கள் முதல் 3 வருடங்கள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் நன்மைகள்

மேலும் இந்தத் திட்டத்தில் 1 ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளுக்குள்ளாக முதலீடு செய்தால் பொது மக்களுக்கு ஆண்டுக்கு 6.80 சதவிகிதமும், 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள்ளாக முதலீடு செய்திருந்தால் 7 சதவிகிதமும், 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் முதலீடு செய்திருந்தால் 6.75 சதவிகிதமும், 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் முதலீடு செய்தால் 6.50 சதவிகிதமும் வட்டி கிடைக்கும். இதில் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவிகிதம் கூடுதலாக வட்டி கிடைக்கும்.

உதாரணத்துக்கு நீங்கள் 2 ஆண்டு காலத்துக்கு 2,00,000 முதலீடு செய்தால் உங்களுக்கு 32,044 ரூபாய் வட்டியுடன் சேர்த்து, 2 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு ரூ.2,32, 044 கிடைக்கும். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருந்தால் ரூ.34, 500 வட்டியுடன் சேர்த்து 2 ஆண்டுகள் முடிவில் 2,34, 500 உங்கள் கைகளில் கிடைக்கும்.

இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது ?

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க நெட் பேக்கிங் மூலமாகவும், YONO ஆப் மூலமாகவும் அல்லது வங்கிக்கு நேரடியாக சென்றும் விண்ணப்பிக்கலாம். நெட் பேக்கிங்கில் உங்கள் அக்கவுண்ட்டை லாகின் செய்து பிக்சட் டெபாசிட் என்ற பகுதிக்கு சென்று e-TDR/e-STDR என்ற ஆப்சனை கிளிக் செய்து, நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை, மற்றும் திட்டத்தின் கால அளவு ஆகியவற்றை செலக்ட் செய்து பணம் செலுத்த வேண்டும். பின்னர் அதனை Confirm கொடுத்தால், நீங்கள் டொசிட் செய்ததற்கான விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் YONO SBI ஆப் மூலம் இந்த திட்டத்தில் இணைய விரும்பினால், அந்த ஆப்பிற்கு சென்று Deposits என்ற ஆப்சனை கிளிக் செய்து அதில் Open Fixed Deposit என்பதை தேர்ந்தெடுத்து TDR or STDR ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து விண்ணபிக்கலாம். மேலும் நேரடியாக உங்கள் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

கனிமா பாடல் சிம்பு பாடலின் இன்ஸ்பிரேஷனா? - சந்தோஷ் நாராயணன்
கனிமா பாடல் சிம்பு பாடலின் இன்ஸ்பிரேஷனா? - சந்தோஷ் நாராயணன்...
மனித கண்களுக்கு புலப்படாத புதிய நிறம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மனித கண்களுக்கு புலப்படாத புதிய நிறம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...
சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம்!
சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம்!...
வீடு மற்றும் தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டணுமா? இதை செய்யுங்க!
வீடு மற்றும் தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டணுமா? இதை செய்யுங்க!...
புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்? கடைசி இடத்தில் CSK!
புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்? கடைசி இடத்தில் CSK!...
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!...
உணவுக்குழாய் புற்றுநோய்: பாதிப்புகள் என்னென்ன?
உணவுக்குழாய் புற்றுநோய்: பாதிப்புகள் என்னென்ன?...
ஒரு லட்சம் வரை உயரும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன ?
ஒரு லட்சம் வரை உயரும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன ?...
திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!
திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!...
படங்களில் கிளாமர் காட்சி.. சுந்தர்.சி சொன்ன வித்தியாசமான பதில்!
படங்களில் கிளாமர் காட்சி.. சுந்தர்.சி சொன்ன வித்தியாசமான பதில்!...
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்!
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்!...