Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 7.50% வரை வட்டி.. இந்த திட்டத்தை கட்டாயம் செக் பண்ணுங்க!
High-Interest Fixed Deposit for Senior Citizens | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மிக மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் சிறப்பு நிலையான வைப்பு நிதி திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிதி பாதுகாப்பை பெற பெரும்பாலான நபர்கள் தேர்வு செய்யும் ஒரு திட்டம் தான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெற முடியும். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்யும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறந்த பலன்களை வழங்குகிறது. உதாரணமாக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் படிப்பு அல்லது திருமணத்தை திட்டமிட்டு இருந்தால் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பயனுள்ளதாக இருக்கும். இதேபோல மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) பணி ஓய்வின் பிறகு நிதியை பெற விரும்பும் நிலையில் இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மூத்த குடிமக்களுக்கு அதிக லாபத்தை வழங்கும் எஃப்டி திட்டம்
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு பணி ஓய்வின் பிறகு நிதி பற்றாக்குறை மற்றும் தேவை ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும் நிலையான வைப்பு நிதி திட்டமாக எஸ்பிஐ பேட்ரான்ஸ் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எத்தகைய சிறப்பு பலன்களை பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான எஃப்டி – அதிக வட்டி வழங்கும் திட்டம்
எஸ்பிஐ பேட்ரான்ஸ் எஃப்டி திட்டம்
எஸ்பிஐ பேட்ரான்ஸ் (SBI Patrons) நிலையான வைப்பு நிதி திட்டம் 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பொதுவான மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுவதை விடவும் அதிக வட்டி வழங்கப்படுகிறது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் என அழைக்கப்படும் நிலையில், 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மிக மூத்த குடிமக்களாக கருதப்படுகின்றனர். இந்த நிலையில், மற்ற வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் நிலையான திட்டங்களை விடவும் இந்த திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.
மிக மூத்த குடிமக்களுக்கான இந்த எஸ்பிஐ பேட்ரான்ஸ் திட்டத்திற்கு 4.10 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.3 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7.5 சதவீதமும், 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7.25 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
பிற மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களை விடவும் இந்த திட்டத்தில் அதிக வட்டி வழங்கப்படுவதால் இது மிக மூத்த குடிமக்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.