சேமிப்பு கணக்கு துவங்க சிறந்த வங்கிகள் எது? தேர்ந்தெடுப்பது எப்படி?
Savings Account Guide: ஏப்ரல் 2025-இல் முன்னணி வங்கிகள் வழங்கும் சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்கள் வழங்குகின்றன? வங்கிகளை தேர்வு செய்வது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வங்கிகளில் (Bank) சேமிப்பு கணக்குகள் இல்லாதவர்களே இல்லை எனலாம். ஆனால் நம் பணத்தை சேமிக்க சரியான வங்கிளை தேர்ந்தெடுப்பது அவசியம். சேமிப்பு கணக்கு (Savings Account) என்பது நம் நிதி மேலாண்மையின் அடிப்படை. நிதி பாதுகாப்பு பண பரிவர்த்தனை வசதி, வட்டி வருமானம் ஆகியவற்றை கலந்தாலோசித்து வங்கிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவின் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank Of India), எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் தங்களின் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்துள்ளன. அந்த வங்கிகளில் எது சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்பதை பார்க்கலாம். இது என்டிடிவியில் வெளியான கட்டுரையின் படி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
சேமிப்பு கணக்குகான வட்டி விகித்ததை 2.75 சதவிகிதமாக நிர்ணயத்திருக்கிறது.
எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank)
கடந்த ஏப்ரல் 12, 2025 அன்று முதல் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை 2.75 சதவிகிதமாக குறைத்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
கடந்த ஏப்ரல் 15, 2025 அன்று சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் 2.75 சதவிகிதமாக குறைத்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank Of India)
இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வட்டி விகித்தை ரூ.10 கோடி வரை 2.75 சதவிகிதமாகவும், 10 கோடிக்கும் மேல் 3 சதவிகிதமாகவும் நிர்ணயித்துள்ளது.
2025, ஏப்ரல் நிலவரப்படி, பெரும்பாலான முக்கிய வங்கிகள் சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களை 2.75% ஆக குறைத்துள்ளன. SBI வங்கி மட்டும் ரூ.10 கோடி மேல் சேமிப்பு தொகைக்கு 3% வட்டி வழங்குகிறது. உங்கள் சேமிப்புகளை அதிகரிக்க விரும்பினால், சிறிய நிதி வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பதை கவனத்தில் கொள்ளலாம்.
சேமிப்பு கணக்கு துவங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
சேமிப்பு கணக்கு என்பது உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு ஆரம்ப நிலை வங்கி சேவையாகும். ஆனால், ஏதேனும் வங்கியைத் தேர்வுசெய்வதற்கு முன் அதன் வட்டி விகிதத்தை மட்டும் அல்லாமல் மற்ற அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சில வங்கிகள் மாதந்தோறும் கணக்கில் ஒரு குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகின்றன. அப்படி வைத்திருக்க தவறினால் கட்டணங்களையும் விதிக்கின்றன. அதனால் சேமிப்பு கணக்கு துவங்கும் முன் அந்த வங்கியின் குறைந்த பட்ச தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்து செய்துகொள்ள வேண்டும்.
ஏடிஎம் சேவைகள், யுபிஐ பரிமாற்றங்கள், பிற வங்கிகளுக்கு பணம் அணுப்புதல் போன்றவற்றுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
சேமிப்பு கணக்கு துவங்கும் முன் அந்த வங்கியின் ஆன்லைன் சேவைகள் எப்படி இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இதன் காரணமாக அடிக்கடி வங்கிகளுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. இறுதியாக வங்கிகளின் நம்பகத்தன்மை குறித்து அறிந்துகொள்ளுங்கள். பொதுத்துறை வங்கிகள் பற்றி பிரச்னை இல்லை. ஆனால் தனியார் வங்கிகளைத் தேர்ந்தெடுக்கும் போது அதனை கவனிப்பது அவசியம்.