ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. குறையப்போகும் வீடு, வாகன கடன்களின் வட்டி!

RBI Cuts Repo Rate: வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் மூலம் வாகனம், தனிநபர், வீட்டு கடன்களுக்கான தவணை குறைய வாய்ப்புள்ளது.

ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. குறையப்போகும் வீடு, வாகன கடன்களின் வட்டி!

ரிசர்வ் வங்கி

Updated On: 

09 Apr 2025 12:02 PM

வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் (RBI Cuts Repo Rate) 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் மூலம் வாகனம், தனிநபர், வீட்டு கடன்களுக்கான தவணை குறைய வாய்ப்புள்ளது.

ரெப்போ வட்டியை 6 சதவீதம் குறைத்த ஆர்பிஐ

தொடர்ந்து, இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி 6 சதவீதமாக தற்போது உள்ளது.

ரெப்போ விகிதத்தைக் குறைப்பதன் மூலம் வீடு மற்றும் வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மாதாந்திர தவணை  வட்டி விகிதம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் 4 சதவீதம் குறைந்துள்ள நிலையிலும், பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பது குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறையப்போகும் வீடு, வாகன கடன்களின் வட்டி

 

2025-26 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர், ” 2025-26 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்பு 6.7 சதவீதமாக இருந்தது” என்றார்.

இவரின் கூற்றுப்படி, முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கலாம். மூன்றாவது காலாண்டில் இந்த எண்ணிக்கை 6.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, 2026 நிதியாண்டில் நாட்டில் பணவீக்க விகிதம் 4 சதவீதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதமாகும். ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது, ​​வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறைந்த செலவில் நிதியைப் பெறலாம். வங்கிகள் இந்த வட்டி விகிதத்தில் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்தால், வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் அல்லது பிற வகையான கடன்களை எடுக்கும் மக்கள் குறைந்த வட்டி விகிதம் இருக்கும்.