புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்யும் ஆர்பி!

RBI Announces New 100 and 200 rupees Notes | இந்தியாவில் ஏற்கனவே 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் புழகத்தில் உள்ள நிலையில், புதிய 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நோட்டுக்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்யும் ஆர்பி!

ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

Updated On: 

07 Apr 2025 19:37 PM

சென்னை, ஏப்ரல் 07 : இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) புதிய 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் தான் புதிய 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆர்பிஐ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள இந்த புதிய ரூபாய் நோட்டுக்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் நிதி மேலாண்மையை பராமரித்து வரும் நிலையில், அவ்வப்போது பல முக்கிய முடிவுகளை எடுக்கும். அதாவது, பண பரிவர்த்தனை விதிகளில் மாற்றம், ரூயாய் நோட்டுகளில் மாற்றம், புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது என பல முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்திய ரிசர்வ வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில், ஆர்பிஐ-ன் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றுள்ளார்.

ஆர்பிஐ-ன் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள அவர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆர்பிஐ அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய ரூபாய் நோட்டுக்களின் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஆர்பிஐ வெளியிட உள்ள இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் பர்ப்பில் (Purple) நிறத்தில் இருக்கும் என்றும், இந்த ரூபாய் நோட்டுக்களும் மகாத்மா காந்தியின் புகைப்படம் அடங்கியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் புழகத்தில் உள்ள நிலையில், இந்த புதிய ரூபாய் நோட்டுக்களின் அறிமுகத்தால் அந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி, புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுவதால் பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு எந்த வித சிக்கலும் இல்லை என்றும், அவற்றை வழக்கம் போல பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் கையெழுத்து இடம் பெற்றிருக்கும். ஆர்பிஐஇன் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்றுள்ள நிலையில், அவரின் கையெழுத்து அடங்கிய புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும், இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.