RBI : ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் குறைக்கும் ஆர்பிஐ?.. எஸ்.பி.ஐ அறிக்கை கூறுவது என்ன?

RBI Repo Rate Cut | இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களில் மட்டும் இரண்டு முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில், மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரெப்போ வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்க உள்ளதாக எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.

RBI : ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் குறைக்கும் ஆர்பிஐ?.. எஸ்.பி.ஐ அறிக்கை கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Apr 2025 17:09 PM

சென்னை, ஏப்ரல் 17 : இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) சமீபத்தில் ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்த நிலையில், மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் அறிக்கை கூறியுள்ளது. அதாவது ஜூன் (June) மற்றும் ஆகஸ்ட் (August) மாதங்களில் இந்திய ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் (Base Point) வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் என்று அது கூறியுள்ளது. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறித்து எஸ்பிஐ கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்த ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கிகளுக்கு விதிமுறைகளை விதிப்பது, ரெப்போ வட்டிம் விகிதத்தை அறிவிப்பது என பல முக்கிய பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து ஆர்பிஐ அறிவித்தது. அதாவது 6.25 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை வெறும் 6 சதவீதமாக குறைத்தது. இதன் காரணமாக தற்போது பல வங்கிகள் தங்களில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன.

6 சதவீதமாக குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம்

இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாவது முறையாக இந்த வட்டி விகித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதாவது, முன்னதாக 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாவது முறையாக 25 புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக உள்ளது.

50 அடிப்படை புள்ளிகளை குறைக்கும் ஆர்பிஐ?

இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ மீண்டும் குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக எஸ்பிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளது. பணவீக்கம் குறைந்து வருவதால் அதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதமும் குறையும் என கருதப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதம் 100 புள்ளிகள் வரை குறையும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், மாறிக்கொண்டே இருக்கும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு 50 புள்ளிகள் வரை குறையலாம் என எதிர்ப்பார்க்கபடுவது குறிப்பிடத்தக்கது.