வேலைக்கே போகாமல் மாதம் ரூ.5,000 சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா?
Post Office Monthly Income Scheme | வேலைக்கே செல்லாமல் மாத வருமானம் பெற நினைக்கும் நபர்களுக்கு மாதம் ரூ.5,500 வரை ஊதியம் வழங்ககூடிய திட்டம் தான் தபால் நிலைய மாத வருமானம் திட்டம். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
மனிதர்களுக்கு வருமானம் (Income) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வருமானம் இல்லை என்றால் எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மாத வருமானம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மாத வருமானம் வேண்டும் என்றால் அதற்கு வேலைக்கு செல்ல வேண்டும். ஆனால், வேலைக்கே செல்லாமல் மாத வருமானம் கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா.
உணமைதான், அஞ்சலக சேமிப்பு திட்டம் (Post Office Saving Scheme) மூலம் வேலைக்கே செல்லாமல் மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் மாதம் ஊதியம் பெறுவதை போல குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு பெற முடியும்.
தபால் நிலைய மாத வருமான திட்டம்
தபால் நிலையங்கள் மூலம் அரசு செயல்படுத்தி வரும் ஒரு அசத்தலான திட்டம் தான் இந்த தபால் நிலைய சேமிப்பு திட்டம். வேலைக்கு செல்ல முடியாது ஆனால், மாத மாதம் செலவுக்கு குறிப்பிட்ட தொகை தேவைப்படும் என நினைக்கும் பொதுமக்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகையும் பத்திரமாக இருக்கும் அதற்கு பலனாக மாதம் மாதம் சரியாக வட்டியும் வரவு வைக்கப்படும்.
தபால் நிலைய மாத வருமான திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
இந்த தபால் நிலைய மாத வருமான திட்டத்தில் தனியாகவும், இரண்டு பேர் இணைந்து கூட்டாகவும் கணக்கு தொடங்கலாம். தனியாக தொடங்கப்படும் கணக்குக்கு அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம் ஆகும். இதுவே கூட்டுக்கணக்கு என்றால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் லட்சக்கணக்கில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று இல்லை. குறைந்தபட்சமாக ரூ.500 முதலே முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
மாதம் ரூ.500 வருமானமாக பெறலாம்
இந்த அஞ்சலக மாத வருமான திட்டத்தில் நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், முதலீடு செய்த நபருக்கு மாதம் மாதம் சரியாக ரூ.5,500 வட்டியாக வந்துவிடும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் சுமார் 5 ஆண்டுகள் என்ற நிலையில், 5 ஆண்டுகளுக்கு தடை இல்லாமல் மாதம் மாதம் ரூ.5,500 வருமானமாக பெறலாம்.
மாதம் ரூ.9,250 வருமானமாக பெறுவது எப்படி?
மாதம் ரூ.5,500 வருமானமாக பெறுவது குறைவாக கருதினால், மாதம் ரூ.9,250 வருமானம் தரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். மாதம் ரூ.9,250 வருமானமாக பெற அஞ்சலக மாத வருமான திட்டத்தில் கூட்டு கணக்கு தொடங்க வேண்டும். இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்யப்படும் நிலையில், 7.4 சதவீதம் வட்டியின் அடிப்படையில் மாதம் மாதம் ரூ.9,250 வட்டியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.