Post Office FD : 5 ஆண்டுகளுக்கான அஞ்சலக FD.. ரூ.60,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Post Office Fixed Deposit Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ.60,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மனிதருக்கும் பொருளாதாரம் (Economy) என்பது மிக முக்கியமாகும். பொருளாதாரம் இல்லை என்றால், மருத்துவம், விபத்து என எதிர்பாராமல் ஏற்படும் சம்பவங்களை கையாள்வது மிகவும் சிரமமாக மாறிவிடும். எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முன்னதாகவே சேமிக்க தொடங்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக பலரும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு சேமிப்பு தொடங்கும் பொதுமக்களின் முதன்மை தேவாக இருப்பது அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டம் (Post Office Fixed Deposit Scheme) தான்.
அதிக லாபத்தை வழங்கும் அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம்
அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டம் மிகவும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், இந்த திட்டத்தை அஞ்சலகங்கள் மூலம் அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது. அரசின் நேரடி கட்டுப்பாடல் இந்த திட்டம் செயல்பட்டு வருவதால், இதில் நிதி இழப்பு உள்ளிட்ட அபாயங்கள் மிகவும் குறைவு. அதுமட்டுமன்றி இந்த திட்டங்களுக்கு அதிக வட்டியும் வழங்கப்படுவதால், சிறந்த லாபத்தை பெற இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கான அஞ்சலக நிலையான பைப்புநிதி திட்டத்தில் ரூபாய் 60 ஆயிரம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலக FD – வட்டி விகிதங்கள்
- 1 ஆண்டுக்கான அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டம் – 6.9 சதவீதம்
- 2 ஆண்டுக்களுக்கான அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டம் – 7 சதவீதம்
- 3 ஆண்டுக்களுக்கான அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டம் – 7.1 சதவீதம்
- 5 ஆண்டுக்களுக்கான அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டம் – 7.5 சதவீதம்
ரூ.60,000 முதலீட்டுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்
5 ஆண்டுகளுக்கான அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இதில் நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்து 5 ஆண்டுகளுக்கு ரூ.60,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, முதலீடு செய்த 5 ஆண்டுகளில் வட்டியாக மட்டும் உங்களுக்கு ரூ.36,997 கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.60,000 கிடைக்கும். ஆக மொத்தம் திட்டத்தின் முடிவில் நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் அதன் வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.86,997 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.