பணப்பரிமாற்றத்தை எளிதாக்கிய EPFO: ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
PF Transfer Made Easier: தற்போது பணப்பரிமாற்றத்தை EPFO எளிதாக்கியிருக்கிறது. இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது பழைய கணக்கில் இருந்து புதிய கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்ய எந்த ஒப்புதலும் தேவையில்லை.இதன் மூலம் பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்குகளை சுலபமாக நிர்வகிக்க முடியும்.

இப்போது பி.எப் பணம் எடுப்பது மிக எளிதாகிவிட்டது. ஊழியர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கும் வகையில், இபிஎஃப்ஓ (EPFO) முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன் படி, பி.எஃப் (PF) பணத்தை பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கே மாற்றும்போது அனுமதி பெற தேவையில்லை. இதுவரை, ஒரு ஊழியர் தனது பி.எஃப் பணத்தை புதிய கணக்கில் சேர்க்க விரும்பினால், பழைய நிறுவனத்திடம் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக இருந்தது. இதனால் பணியாளர்களுக்கு தாமதமும், சிக்கலும் ஏற்பட்டது. ஆனால் இப்போது, இபிஎஃப்ஓ தானாகவே உரிய தகவல்களை பரிசீலித்து, பணத்தை நேரடியாக மாற்றும் வசதியை வழங்கியுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம், ஊழியர்களின் பி.எஃப் பணம் விரைவாகவும் எளிதாகவும் புதிய கணக்கில் சேரும். மேலும், காலதாமதம் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.
இந்திய டுடவில் வெளியிட்டுள்ள கட்டுரையின் படி முன்பு பிஎஃப் கணக்கை மாற்றும்போது, தற்போதைய மற்றும் முந்தைய நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இது பல நேரங்களில் தாமதத்திற்கும் சிக்கலுக்கும் காரணமாகியது. இப்போது அந்த கட்டாயம் நீக்கப்பட்டுள்ளதால், பணியாளர்கள் நேரடியாக தங்களது பிஎஃப் கணக்கை ஆன்லைனில் UAN (Universal Account Number) மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
புதிய முறைப்படி எப்படி பிஎஃப் கணக்கை மாற்றுவது?
-
பணியாளர் தங்களது UAN ஐ பயன்படுத்தி EPFO ஆன்லைன் போர்டல் அல்லது UMANG செயலியில் லாகின் செய்ய வேண்டும்.
-
அங்கு “One Member One EPF Account” என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து, புதிய நிறுவனத்தின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
-
பதிவு செய்த பின், EPFO தானாகவே பழைய மற்றும் புதிய கணக்குகளை ஒப்பிட்டு அனுமதிக்கும்.
-
இதில் எந்த நிறுவனத்தின் தனிப்பட்ட அனுமதியும் தேவையில்லை.
இந்த புதிய மாற்றம் 1.25 கோடி உறுப்பினர்களுக்கு நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடத்திற்கு ரூ.90,000 கோடி மதிப்பிலான பிஎஃப் நிதிகள் வேகமாக மாற்றப்பட்டு, வேலை மாறும் ஊழியர்கள் தங்களது ஓய்வூதிய சேமிப்புகளை எளிதாக பெற்றுக்கொள்ள உதவும்.
இதில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியவை
-
UAN எண் ஆக்டிவ் நிலையில் இருக்க வேண்டும்.
-
பழைய மற்றும் புதிய நிறுவன விவரங்கள் Aadhaar மற்றும் EPFO ரெகார்டில் சரியாகப் பொருந்த வேண்டும்.
-
எந்தவொரு வித சிக்கலும் ஏற்பட்டால், EPFO ஹெல்ப்லைன் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)