PAN 2.0 : பான் 2.0-ன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?.. பழை பான் செல்லாதா?

PAN 2.0 Special Features | இந்தியாவில் ஏற்கனவே பான் கார்டு பயன்பாட்டில் உள்ள நிலையில், பான 2.0 அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் பான் 2.0-ன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, பழைய பான் கார்டு என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PAN 2.0 : பான் 2.0-ன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?.. பழை பான் செல்லாதா?

பான் கார்டு

Published: 

25 Mar 2025 06:29 AM

இந்தியாவில் வங்கி செயல்பாடுகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் வகையில் பான் கார்டு (PAN – Permanent Account Number Card) பயன்பாட்டில் உள்ளது. வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் இந்த பான் கார்டை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. காரணம் ஒருவர் பயன்படுத்தும் பான் கார்டில் அவர் எத்தனை வங்கி கணக்குகளை  வைத்துள்ளாரோ அனைத்தும் அதன் கீழ் கொண்டுவரப்படும். அதன் மூலம் அவர் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளை தெரிந்துக்கொள்ள முடியும்.

வருமானம் வரி, சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே பான் கார்டு பயப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பான் 2.0 (PAN 2.0) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்களுக்கு பல விதமான கேள்விகள் எழ தொடங்கியது. குறிப்பாக பழைய பான் கார்டு செல்லாதா, புதிய பான் கார்டு எதற்காக வழங்கப்படுகிறது என்றெல்லாம். இந்த நிலையில், பான் 2.0-ல் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பான் 2.0-ல் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்தியாவில் பான் கார்டு 1972 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் வருமான வரி செலுத்தும் நபர்களின் எண்களாக இந்த பான் எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பிறகு பரவலாக பொதுமக்கள் வங்கி கணக்குகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ள தொடங்கிய நிலையில், தற்போது அனைவருக்கும் கட்டாயமாக மாறிவிட்டது. பான் கார்டு மூலம் ஒருவர் மேற்கொள்ளும் அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளையும் தெரிந்துக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்த பான் 2.0 மேலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பான் கார்டு தற்போது தொழில்நுட்ப வசதிகளால் மேலும் செறிவூட்டப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.1,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பான் 2.0-ல் QR (Quick Response) கோடு அம்சம் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்கேன் செய்வதன் மூலம் பான் கார்டை மிக சுலபமாக பயன்படுத்த முடியும். இந்த புதிய மாற்றங்கள் பான் கார்டு பயன்பாட்டை டிஜிட்டல் மயமாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பான் கார்டு QR உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்காத நிலையில், முற்றிலும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பதற்காக தற்போது பான் 2.0-ல் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.