Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யுபிஐ பரிவர்த்தனை விதிகளில் வந்த முக்கிய மாற்றம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

NPCI's New UPI Rules | என்பிசிஐ சமீபத்திய அறிவிப்பின்படி, சர்வதேச யுபிஐ பரிவர்த்தனைகளில் QR கோடு பகிர்வு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உள்நாட்டு பரிவர்த்தனைகளை பாதிக்காது. இந்த தடை, வெளிநாட்டு வணிகர்கள் என்பிசிஐ விதிகளுக்கு உட்பட்டவர்களாக இல்லாததால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில், என்பிசிஐ-ன் இந்த புதிய விதி குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐ பரிவர்த்தனை விதிகளில் வந்த முக்கிய மாற்றம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 14 Apr 2025 00:12 AM

NPCI (National Payments Corporation of India) எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், பண பரிவர்த்தனைகளை கண்காணித்து வரும் நிலையில், பணப் பரிவர்த்தனை தொடர்பான சில முக்கிய விதிகளை அவ்வப்போது அறிவித்தும், விதிகளில் மாற்றமும் செய்து வருகிறது. அந்த வகையில் என்சிபிஐ சமீபத்தில் சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த விதிகள் கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pe) உள்ளிட்ட அனைத்து விதமான யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனைகளை செயலிகளுக்கும் பொருந்தும். ஒரு சில வகையான பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த விதிகள் கொண்டுவரப்பட்டு இருந்தாலும், இதன் காரணமாக பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சில சிக்கலகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் யுபிஐ பண பரிவர்த்தனைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்ன, இதன் காரணமாக என்ன என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

QR கோடு பகிர்ந்து பண பரிவர்த்தனை செய்ய முடியாது

யுபிஐ செயலிகளில் QR (Quick Response) கோடு பகிர்ந்துன் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான ஒரு அம்சம் உள்ளது. இதன் மூலம் மொபைல் எண் இல்லமால் QR கோடுகளை பகிர்ந்து பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதில் தான் தற்போது ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, QR ஷேர் மற்றும் பே மூலம் செய்யப்படும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதி மாற்ற சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். உள்நாட்டில் பண பரிவர்த்தனை செய்பவர்கள் வழக்கம் போல பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஆனால், அவ்வாறு உள்நாட்டு பரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது?

மொரிஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை மற்றும் யுஏஐ உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் யுபிஐ சேவையை பயனபடுத்துகின்றன. இந்த நாடுகளில் யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல அங்கு செல்லும் இந்தியர்களுக்கு யுபிஐ பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு இருக்கும் இந்தியர்கள் பொருட்களை வாங்கிவிட்டு QR கோடு மூலம் கட்டணத்தை செலுத்தி வந்தனர். யுபிஐ பண பரிவர்த்தனை வணிக ரீதியாக செய்யப்படுகின்றன. ஆனால், இந்த நாடுகளில் இருக்கும் வணிகர்கள் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே இந்த விதி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் இனி போக்குவரத்து நெரிசல் குறையுமா? வந்த புதிய வசதி
கொடைக்கானலில் இனி போக்குவரத்து நெரிசல் குறையுமா? வந்த புதிய வசதி...
மியான்மரில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்!
மியான்மரில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்!...
சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்!...
5வது முறையும் தனித்தே போட்டி - நாதக தலைவர் சீமான் திட்டவட்டம்!
5வது முறையும் தனித்தே போட்டி - நாதக தலைவர் சீமான் திட்டவட்டம்!...
அடுத்த 2 நாட்கள்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்!
அடுத்த 2 நாட்கள்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்!...
இனி கேஸ் தட்டுப்பாடே வராது... வீடுதோறும் வரும் குழாய் வழி எரிவாயு
இனி கேஸ் தட்டுப்பாடே வராது... வீடுதோறும் வரும் குழாய் வழி எரிவாயு...
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்... நேர அட்டவணை இதோ
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்... நேர அட்டவணை இதோ...
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!...
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...