2025 May Changes : ATM-ல் பணம் எடுப்பது முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை.. மே மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!
May 2025 Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்படும். அதன்படி, 2025, மே மாதத்திலும் ஏடிஎம்-ல் பணம் எடுப்பது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025, ஏப்ரல் மாதம் இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடைய உள்ளது, அதன்படி விரைவில் 2025, மே மாதம் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஆதார் கார்டு (Aadhaar Card), கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), பெட்ரோ டீசல் விலை (Petrol and Diesel Price) உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்படும். அதன்படி, 2025 மே மாதத்திலும் கேஸ் சிலிண்டர் விலை, வங்கி கணக்கு விதிகள் (Bank Account Rules), ஏடிஎம் (ATM – Automated Teller Machine) பண பரிவர்த்தனை விதிகள் உள்ளிட்டவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 2025, மே மாதம் முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank of India) புதிய விதிகளின் படி, 2025 மே 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் மையங்கள் மூலம் பணம் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். அதாவது ஒரு மாதத்திற்கு ஏடிஎம் மூலம் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படும். தற்போது அந்த கட்டணத்தை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.
- ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ. 17 முதல் ரூ.19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஏடிஎம் மூலம் பேலன்ஸ் செக் செய்வதற்கான கட்டணம் ரூ. 6-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவில் வரப்போகும் மாற்றங்கள்
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் மே 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளன.
- இனி ரயிலில் ஏசி கோச்சில் காத்திருப்பு டிக்கெட்டிகள் (Waiting Tickets) இருக்காது.
- காத்திருப்பு டிக்கெட்டில் இருப்பவர்களுக்கு பொது பெட்டிகளில் (General Coaches) மட்டுமே டிக்கெட்டுகள் கிடைக்கும்.
- ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து வெறும் 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.
கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம்
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். அந்த வகையில், 2025 மே மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2025 ஏப்ரல் மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில் , 2025 மே மாதத்தில் அதில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.