Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bank Holiday : மே மாதத்தில் இந்த 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க!

May 2025 Bank Holidays in India | ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை உள்ளிட்ட காரணங்களுக்காக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி 2025, மே மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Bank Holiday : மே மாதத்தில் இந்த 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 28 Apr 2025 19:09 PM

2025, ஏப்ரல் மாதம் இன்னும் இரண்டு நாட்களுக்குள் நிறைவடைய உள்ளது. அதன்படி, விரைவில் 2025, மே மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மே மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது (May 2025 Bank Holidays) என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, மே மாதத்தில் இந்தியா முழுவதும் 12 நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மே மாதத்தில் எந்த எந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை

மே 1, 2025 – உழவர் திருநாள் என்பதால் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 4, 2025 – மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 9, 2025 குரு ரபிந்திர ஜெயந்தி என்பதால் மேற்கு வங்கத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 10, 2025 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 11, 2025 – மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 12, 2025 – புத்த பூர்னிமா என்பதால் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 16, 2025 – சிக்கிம் தினம் என்பதால் சிக்கிம் மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 18, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 24, 2025 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 25, 2025 – மாதத்தின் நான்காவது ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 26, 2025 – இஸ்லாம் ஜெயந்தி என்பதால் திரிபுராவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 29, 2025 – மஹாரான பிரதாப் ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் ஷிம்லாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் வங்கி சேவைகளுக்கு என்ன செய்யலாம்?

மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது வங்கி சார்ந்த தேவைகளை அதற்கு ஏற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி, இந்த நாட்களில் வங்கி சேவைகள் தேவைப்படும் நபர்கள் வங்கிகள் இணைய சேவை, மொபைல் செயலிகள், ஏடிஎம் மையங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!...
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!...
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?...
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்...
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!...
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?...
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!...
AI-ஆல் வேலை போகாது - டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ தலைவர்
AI-ஆல் வேலை போகாது - டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ தலைவர்...
அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்.. பால்வளத்துறை ஒதுக்கீடு!
அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்.. பால்வளத்துறை ஒதுக்கீடு!...
விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடி இந்த நடிகையா?
விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடி இந்த நடிகையா?...