ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே ரூ.10 லட்சம்.. 3 மடங்கு லாபம் தரும் சூப்பர் திட்டம்!

Term Deposit Scheme | அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூன்று மடங்கும் லாபம் பெற எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே ரூ.10 லட்சம்.. 3 மடங்கு லாபம் தரும் சூப்பர் திட்டம்!

மாதிரி புகைப்படம்

Published: 

28 Mar 2025 18:43 PM

மனிதர்களுக்கு பொருளாதாரம் (Economy) மிகவும் முக்கியமானதாகும், பொருளாதாரம் நிலையாக இல்லை என்றால் எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறைகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். பொருளாதாரம் எப்போதும் நிலையானதாக இருக்காது. எப்போது வேண்டுமானாலும் பொருளாதாரத்தை இழக்க கூடிய சூழல் ஏற்படலாம். இத்தகைய சூழல்களில் இருந்து மீண்டு வருவதற்காக தான் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

சேமிப்பு என்றால் பெரும்பாலான மக்களின் முன்னணி தேர்வாக இருப்பது நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit Scheme) தான். இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பாக கருதப்படும் நிலையில், அதிக வட்டியும் வழங்கப்படுவதால் சாமானிய மக்களின் தேர்வாக இது உள்ளது. ஆனால், நிலையான வைப்பு நிதி திட்டத்தை விடவும் சிறந்த பலன்களை வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது. அதுதான், அஞ்சலக டெர்ம் டெபாசிட் திட்டம் (Post Office Term Deposit Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூன்று மடங்கு லாபத்தை பெறலாம்.

அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்கள்

தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமன்றி, அரசும் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது தபால் நிலையங்கள் மூலம் நிலையான வைப்பு நிதி (Fixed Deposit), தொடர் வைப்பு நிதி (Recurring Deposit), தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Saving Certificate) உள்ளிட்ட பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தபால் நிலைய டெர்ம் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்து மூன்று மடங்கு லாபத்தை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டெர்ம் டெபாசிட் திட்டம் – மூன்று மடங்கு லாபம் பெறுவது எப்படி?

மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் இந்த தபால் நிலைய டெர்ம் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்யலாம். அதாவது 5 ஆண்டுகளுக்கான அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முடிவில் வட்டியுடன் சேர்த்து ரூ.7,24,974 கிடைக்கும்.

இப்போது இந்த தொகையை மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்படியே முதலீடு செய்யுங்கள். இப்போது 10 ஆண்டுகள் முடிவில் வட்டியாக மட்டும் உங்களுக்கு ரூ.5,51,175 கிடைக்கும். அதாவது 10 ஆண்டுகால முதலீட்டிற்கு பிறகு மொத்தம் ரூ.10,51,175 கிடைக்கும். தற்போது இந்த தொகையை மேலும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வட்டி மட்டுமே ரூ.10,24,149 கிடைக்கும். அதன்படி, 15 ஆண்டு கால முதலீட்டில் மொத்தம் ரூ.15,24,149 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.