தினமும் ரூ.45 சேமித்தால் போதும்.. ரூ.25 லடசம் பெறலாம்.. எப்படி தெரியுமா?
LIC Jeevan Anand Scheme | எல்.ஐ.சி நிறுவனம் பல வகையான காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தினமும் ரூ.45 முதலீடு செய்தால் ரூ.25 லட்சம் வழங்கும் ஜிவன் ஆனந்த் பாலிசி திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மனிதருக்கும் காப்பீடு மிகவும் அவசியம் ஆகும். காப்பீட்டை பொருத்தவரை மருத்துவ காப்பீடு (Medical Insurance) , ஆயுள் காப்பீடு (Life Insurance) என பல திட்டங்கள் உள்ளன. அவை எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்கள் மற்றும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலான மக்கள் இந்த காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு பயனுள்ள காப்பீட்டு திட்டங்களை வழங்கும் நிறுவனமாக உள்ளது எல்.ஐ.சி (LIC – Life Insurance Corporation of India). எல்.எஐ.சி பல பயனுள்ள காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எல்.ஐ.சியின் ஒரு காப்பீடு திட்டத்தில் மாதம் ரூ.1,358 முதலீடு செய்து ரூ.25 லட்சம் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அது என்ன திட்டம், அதில் எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் திட்டம்
அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் எல்.ஐ.சி நிறுவனம் காப்பீடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் பாலிசி (LIC Jeevan Anand Policy). இந்த திட்டத்தில் மிக குறைந்த அளவாக தினமும் ரூ.45 செலுத்தி அதிக லாபத்தை பெற முடியும் என கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் காப்பீடு திட்டங்களுக்கு அதிக முதலீடு செய்ய வேண்டு என்ற எண்ணத்தில் முதலீடு செய்யாமலே இருப்பர். இந்த நிலையில், பெரிய அளவு பொருளாதாரா பின்னணி இல்லாத, சமானிய மக்களும் முதலீடு செய்யும் வகையில் தான் இந்த எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
குறைந்த முதலீட்டில் பெரிய தொகையை பெற விரும்பும் நபர்களுக்கு எல்.ஐ.சி-ன் இந்த ஜீவன் ஆனந்த் பாலிசி சிறந்ததாக இருக்கும். இந்த பாலிசி ஒரு டெர்ம் பாலிசியை போன்றது. அதனால், பாலிசியின் காலத்திற்குள் நீங்கள் பிரீமியத்தை செலுத்தலாம். இந்த திட்டத்தில் பாலிசிதார்ரகளுக்கு ஒன்று அல்ல பல முதிர்வு சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 லட்சமாக உள்ள நிலையில், அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.
ரூ.45 சேமிப்பதன் மூலம் ரூ.25 லட்சம் பெறலாம்
எல்.ஐ.சியின் இந்த ஜீவன் ஆனந்த் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.45 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை பொருத்தவரை நீண்ட ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் சிறந்த பலன்களை பெற முடியும். அதாவது தினமும் ரூ.45 என்ற அடிப்படையில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் முதிர்ச்சிக்கு பிறகு ரூ.25 லட்சம் கிடைக்கும்.
தினமும் ரூ.45 என்ற அடிப்படையில் 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தீர்கள் என்றால், மொத்தமாக ரூ.5,70,500 வைப்பு வைத்திருப்பீர்கள். இப்போது பாலிசி காலத்தின்படி அடிப்படை காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக இருக்கும். அதனுடன் முதிர்வு காலத்திற்கு பிறகு இந்த தொகையை சேர்த்தால் சுமார் ரூ.8.60 லட்சம் திருத்தப்பட்ட போனசாகவும், ரூ.11.50 லட்சம் இறுதி போனசாகவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.