Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ககெய்போ என்ற ஜப்பானிய சேமிப்பு முறை பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் என்ன?

Kakeibo, The Japanese Saving Secret: ஜப்பானிய சேமிப்பு முறை ககெய்போ உங்களது செலவுகளை கட்டுப்படுத்தவும், யோசித்து செலவழிக்கும் பழக்கத்தை வளர்க்கவும், சேமிப்பை அதிகரிக்கவும் உதவும். இந்த முறை எப்படி செயல்படுகிறது? இந்த முறை நமக்கு எப்படி பலனளிக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ககெய்போ என்ற ஜப்பானிய சேமிப்பு முறை பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் என்ன?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 22 Apr 2025 00:05 AM

இந்த வேகமான வாழ்க்கைமுறையில், நாம் சம்பாதிக்கிறோம், செலவழிக்கிறோம். ஆனால் சேமிக்கிறோமா? என்பதே ஒரு பெரிய கேள்வி. வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக நாம் முன்னேறுவதற்கு மட்டும் சேமிக்க வேண்டியதில்லை. சேமிப்பு என்பது நமது எதிர்காலம் குறித்த கவலையை பாதியாக குறைக்கிறது.  துவக்கத்தில் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்தல், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தல்,  பிக்சட் டெபாசிட் (fixed deposit) போல் ஒரு திட்டமிட்ட சேமிப்பு முறைதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. பின்னாட்களில், நவீன கால சேமிப்பு முறைகளாக மியூச்சுவல் ஃபண்ட் (mutual funds), SIP போன்றவை வந்தாலும், பலருக்கு அந்த ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடான சேமிப்பு பழக்கத்தை உருவாக்க முடியவில்லை. இந்த கட்டுரையில் ககெய்போ (Kakeibo) என்ற ஜப்பானிய சேமிப்பு முறை குறித்து பார்ப்போம்.

ககெய்போ என்றால் என்ன?

ககெய்போ என்பது வீட்டு நிதி பதிவு புத்தகம் எனும் பொருள்படுகிறது. இது 1904-ஆம் ஆண்டு ஜப்பானின் முதல் பெண் பத்திரிகையாளர் ஹானி மோட்டோகோ என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த முறை எந்த டிஜிட்டல் சாதனங்களும், ஆப்-களும், எக்செல் ஷீட்களும் இல்லாமல், வெறும் நோட்புக், பேனா மட்டும் கொண்டு நிதியை கண்காணிக்க ஒரு எளிய முறையை பரிந்துரைக்கிறது.

கேள்விகள் மூலம் விழிப்புணர்வு

ஒவ்வொரு தேவையற்ற செலவையும் செய்வதற்கு முன், கீழ்காணும் கேள்விகளை உங்களிடமே கேட்கும் பழக்கத்தை உருவாக்குவதே ககெய்போவின் அடிப்படையாக கருதப்படுகிறது.

  • இந்த பொருள் இல்லாமல் வாழ முடியுமா?

  • என் தற்போதைய நிதி நிலையில் இதை வாங்க முடியுமா?

  • நான் இதைப் பயன்படுத்த போகிறேனா?

  • வீட்டில் இதற்கு இடம் இருக்கிறதா?

  • இதை எங்கே பார்த்தேன்? யாரிடம் இருந்து தெரிய வந்தது?

  • இன்று எனது உணர்வு எப்படி இருக்கிறது? அமைதி? மன அழுத்தம்? சந்தோஷம்? ஆகிய மனநிலைகளில் ஒன்றில் இருக்கிறேனா?

  • இதை வாங்குவதால் என்ன உணர்வு வருகிறது? அது எவ்வளவு நேரம் நீடிக்கும்?

ககெய்போவால் மக்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள்

இவை போன்ற கேள்விகள்,  பலருக்கு முன்னர் யோசிக்காமல் செய்து வந்த செலவுகளை புரிந்துகொள்ள உதவியது. மனநிலையை மாற்றும் சின்னச் செலவுகளை தவிர்த்து, உண்மையாகவே தேவையான விஷயங்களின் மேல் கவனம் செலுத்த முடியும் என்ற நிலை உருவானது. தொடர்ந்து ககெய்போ முறையை பின்பற்றுவதால்,  சேமிப்பு விகிதம் முன்பைக் காட்டிலும் அதிவேகமாக வளரும் மேலும், பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என தெளிவான முடிவுகளை எடுக்க உதவும்

ககெய்போ என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியை முழுமையாக அகற்றும் முறையல்ல. மாற்றாக, மனதார செல்வாக்கு கொடுக்கும் முறையில் செலவுகள் குறைந்து, உண்மையான தேவைகள் மேல் கவனம் செலுத்த உதவுகிறது.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நிதி ஒழுங்கு என்பது வெறும் பொருளாதார முன்னேற்றத்துக்காக மட்டும் அல்ல. அது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கலையாக மாறிவிட்டது. அதற்கு வழிகாட்டும் ஜப்பானிய முறையாக ககெய்போ ஒரு சிறந்த உதாரணம்.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...