வருமான வரி தாக்கல் செய்தால் ரீபண்ட் எப்போது கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Income Tax Return: 2025 - 2026 நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்துவருகின்றனர். கூடுதலாக பிடிக்கப்பட்டிருக்கின்ற தொகையை நாம் எப்படி திரும்ப பெறுவது என்பதையும் எவ்வளவு காலத்தில் அது நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் தங்களது வருமானம், செலவுகள் முதலீடுகள் , செலுத்தி வரி ஆகியவிவரங்களை இந்திய வருமான வரித்துறைக்கு (Income Tax Department) தாக்கல் செய்ய வேண்டும். இதனையடுத்து கூடுதலாக பிடிக்கப்பட்டிருக்கின்ற தொகையை இன்கம் டாக்ஸ் ரிடர்ன் (Income Tax Return) தாக்கல் செய்வதன் மூலம் திரும்ப பெறலாம். அதே போல பணியாளர்கள் தாங்கள் வேலை செய்யும் அலுவலகங்களின் உங்கள் ஊதியத்திற்கு ஏற்ப வருமான வரி (Tax Deducted Source) பிடிக்கப்படும். ஒருவருடத்தின் ஏப்ரல் 1 துவங்கி அடுத்த வருடம் மார்ச் 31 வரை நாம் வருமானத்தை பொறுத்து கணக்கிடப்படும். இது நேரடியாக நாம் பணியாற்றும் அலுவலகத்தில் நமது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி முன் கூட்டியே செலுத்திவிடுவார்கள்.
இந்த நிலையில் 2025–26 நிதியாண்டு ஏப்ரல் 1, 2025 முதல் துவங்கியுள்ள நிலையில் வருமான வரி ரிட்டர்ன் பெற அனைவரும் தயாராகிவருகின்றனர். இதற்கான படிவத்தை விரைவில் வெளியிடுவார்கள். சம்பளதாரர்களுக்கான சம்பள விவரம், டிடிஸ் ஆகியவை அடங்கிய ஃபார்ம் 16 ஆனது ஜூன் 2025 மாதத்திற்குள் கிடைக்கும். அதன் பிறகு வருமான வரி தாக்கல் செய்யலாம்.
ரீபண்ட் தொகையை வருமான வரித்துறை எப்படி முடிவு செய்கிறது?
உங்கள் வருமான வரி சரியாக கணக்கிடப்பட்டு, நீங்கள் டிடிஎஸ் தொகை அதிகமாக செலுத்தியிருந்தால், அதனை வருமான வரித்துறை உங்களுக்கு திருப்பி அளிக்கும். நீங்கள் உங்கள் வருமான வரி வருவாய் குறித்து வெரிஃபை செய்த பிறகுதான் உங்களுக்கு அது திரும்ப கிடைக்கும். உங்கள் வங்கி கணக்கு மூலம் வருமான வரி வருவாய் குறித்து வெரிஃபை செய்து கொள்ளலாம். இதற்கு நெட் பேங்கிங் அல்லது உங்கள் வங்கி கணக்கு வழியாக நீங்கள் வருமான வரித்துறை திருப்பி அளிக்கும் தொகையை வெரிஃபை செய்ய வேண்டும்.
மேலும் நமது ஆண்டு வருமானம், வரிக் கழிவுகள், முன் கூட்டியே செலுத்தி டிடிஎஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நமக்கு திரும்பி அளிக்க வேண்டிய தொகையை வருமான வரித்துறை முடிவு செய்கிறது. நமக்கு திருப்பி அளிக்கப்படும் தொகையில் 0.5 சதவிகிதிம் வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு அதனையும் சேர்த்து அளிக்கப்படும்.
ரீபண்ட் பெற எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் வருமான வரி ரீபண்ட் பெற விரும்பினால், அதை வருமான வரித்துறை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். இது https://incometaxindiaefiling.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று நாம் ரீபண்டுக்கு விண்ணப்பிக்கலாம். முதலில் அதற்கு விண்ணப்பதார்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். நமது ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் நாம் அதிகமாக செலுத்திய தொகையை வங்கிக் கணக்கின் மூலம் வரவு வைக்கப்படும். இந்த தொகை நமக்கு கிடைக்க 4 முதல் 5 வாரங்கள் ஆகும்.