Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RD : தினமும் ரூ.100 முதலீடு செய்தால் போதும்.. ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.. முழு விவரம்!

Post Office Recurring Deposit | அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், தினமும் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

RD : தினமும் ரூ.100 முதலீடு செய்தால் போதும்.. ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 21 Mar 2025 16:21 PM

சமீப காலமாகவே பொதுமக்கள் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நிலையான பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளதால், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் சிலருக்கு சேமிப்பு செய்வதில் தயக்கமும், குழப்பமும் ஏற்படுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் சேமிப்பு, அல்லது முதலீடு செய்வதற்கு போதிய தொகை தங்களிடம் இல்லை என்பதை ஒரு தடையாக கருதுகின்றனர்.

மிக சிறிய தொகை முதலே முதலீடு செய்யலாம்

உண்மையில், சேமிப்பு அல்லது முதலீடு செய்வதற்கு அது ஒரு தடையே இல்லை. காரணம் மிக குறைந்த முதலீட்டில் சேமிப்பு அல்லது முதலீடு செய்வதற்கான வசதிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி மிக சுலபமாக சேமிக்கலாம். அதன்படி, தினமும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. உண்மை தான், வெறும் ரூ.100 முதலீட்டில் மிக எளிதாக ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்.

வெறும் ரூ.100 முதலீட்டில் ரூ.2 லட்சம் லாபம் ஈட்டுவது எப்படி?

அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்ட திட்டம் தான் அஞ்சலக சேமிப்பு திட்டமான அஞ்சல தொடர் வைப்பு நிதி திட்டம் (RD – Recurring Deposit). இந்த திட்டத்தில் குறைந்த பட்சமாக ரூ.50 முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்த நிலையில், ரூ.2 லட்சம் வரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

ரூ.50 முதலீட்டில் ரூ.1 லட்ச பெறுவது எப்படி?

இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்யும் பட்சத்தில், ஒரு மாதத்திற்கு ரூ.1,500 வரை சேமிக்கலாம். இதையே ஒரு ஆண்டு முழுவதும் தொடர்ந்து செய்தால் ரூ.18,000 சேமிக்கலாம். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.50 முதலீடு செய்யும் பட்சத்தில், திட்டத்தின் முடிவில் ரூ.1,07,050 பெறலாம்.

ரூ.100 முதலீட்டில் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி?

இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் தினமும் ரூ.100 முதலீடு செய்யும் பட்சத்தில், ஒரு மாதத்திற்கு ரூ.3,000 வரை சேமிக்கலாம். இதையே ஒரு ஆண்டு முழுவதும் தொடர்ந்து செய்தால் ரூ.36,000 சேமிக்கலாம். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.100 முதலீடு செய்யும் பட்சத்தில், திட்டத்தின் முடிவில் ரூ.2,12,972 பெறலாம்.

இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ரூ.50, ரூ.100 முதல் தங்களால் முடிந்த தொகையை செலுத்தி பொதுமக்கள் சேமிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, குறைந்த வருமானம் கொண்டவர்கள் கூட இந்த திட்டத்தில் நல்ல லாபத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது. 

2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...
அதிகமாக சாப்பிடுவதால் வரும் சில பிரச்னைகள்.. தடுக்கும் முறை!
அதிகமாக சாப்பிடுவதால் வரும் சில பிரச்னைகள்.. தடுக்கும் முறை!...
இன்ஸ்டாகிராமில் ஏஐ! போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!
இன்ஸ்டாகிராமில் ஏஐ! போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!...
தோனிக்கு அண்ணன் இருக்கிறாரா..? முழு பூசணியை மறைத்த கதை!
தோனிக்கு அண்ணன் இருக்கிறாரா..? முழு பூசணியை மறைத்த கதை!...