குறைவான முதலீட்டில் ரூ.1 கோடி சேமிக்கலாம் – எப்படி தெரியுமா?

Best Mutual Funds: மாத சம்பளம் பெறுபவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறைவான தொகையை முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன. அவற்றை எப்படி தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

குறைவான முதலீட்டில் ரூ.1 கோடி சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

11 Apr 2025 18:45 PM

இந்தியாவில் (India) இந்தியாவில் ஒருவரின் மாத சம்பளம் சராசரியாக ரூ.20,000 முதல் ரூ.45, 000 இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் 4 பேர் என்றாலும் அவர்களுக்கு செலவு செய்யவே சம்பளம் போதுமானதாக இருக்கும். இதில் எதிர்பாராதவிதமாக மருத்துவ செலவுகள் வந்துவிட்டால் கடன் (Loan) வாங்கவேண்டிய சூழலில் தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்காலத்திற்கு சேமிப்பதோ அல்லது முதலீடு செய்வது என்பது சவாலான பணி. மியூச்சுவல் பண்ட் (Mutual Fund), பங்கு சந்தை, தங்கம் அல்லது ரியல் எஸ்ட்டேட் என இந்தியாவில் முதலீடு செய்ய பல வழிகள் இருக்கின்றன. சரியான திட்டங்களில் குறைந்த அளவிலான முதலீடுகள் எதிர்காலத்தில் பெரிய அளவில் கைகொடுக்கும். ஆனால் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது சவாலான பணி. ஆபத்துகள் அதிகம் என்பதால் முதலீடு செய்ய தயங்குகின்றனர்.

இந்த நிலையில் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan) என்ற நீண்ட கால முதலீட்டு திட்டம் பயனளிக்கும்.  இதில் குறைந்த தொகையை மாதந்தோறும் முதலீடு செய்துவரும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாம் எதிர்பாராத தொகை நமக்கு கிடைக்கும்.  குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டுகளில், மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்து அதிக லாபம் காணலாம் என கூறப்படுகிறது.​ புதிதாக முதலீடு செய்பவர்கள் மாதம் ரூ.500 கூட முதலீடு செய்யலாம். குறிப்பாக வீடு வாங்குதல், குழந்தைகளின் கல்வி, ஓய்வு திட்டம் போன்ற நீண்டகால இலக்குகளுக்கு இந்த சிப் எனும் முதலீட்டுத் திட்டம் பெரிதும் கைகொடுக்கும்.

ரூ.1 கோடி சேமிப்பது எப்படி?

உதாரணமாக உங்கள் வருமானத்திலிருந்து மாதம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை, 20 முதல் 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்.இந்தத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும். இது நீண்ட கால திட்டம் என்பதால் பொறுமை மிகவும் அவசியம். இதன் மூலம் ஆண்டுக்கு 12 சதவிகிதம் வருவாய் கிடைக்கும். அதே போல நாம் முதலீடு செய்யும் தொகையை ஆண்டுக்கு 10 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் 20 முதல் 25 ஆண்டுகளில் நமது இலக்கான ரூ.1 கோடியை அடையலாம். முதலீட்டைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான மாற்றங்களை செய்வது அவசியம்.

எப்படி முதலீடு செய்வது?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கிளை அலுவலகங்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். பான் கார்டு, ஆதார் கார்டு, மற்றும் புகைப்படம் தேவைப்படும். நமது நிதி இலக்கை பொறுத்து திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். மாதம் எவ்வளவு முதலீடு செய்யப்போகிறோம். முதலீட்டு காலம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். நெட் பேக்கிங் அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமல்லாமல் பங்கு சந்தை,  தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் என நமது தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். நீண்ட கால முதலீடுகளே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.