ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் மாதம் ரூ.9,000 வருமானம் கிடைக்கும்.. எப்படி?

Monthly Investment Scheme | மாத வருமானம் பெறும் வகையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தான் அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் மாதம் ரூ.9,000 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் மாதம் ரூ.9,000 வருமானம் கிடைக்கும்.. எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 Apr 2025 22:42 PM

சமீப காலமாகவே எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு ஏராளமான பொதுமக்கள் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்பாராத தேவைகளை பூர்த்தி செய்ய சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாத ஊதியத்தை அன்றாட செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நிதியை பாதுகாக்க உதவாது. சிறிது அளவேனும் பணத்தை சேமிப்பது தான் பாதுகாப்பான பொருளாதாரத்தை கட்டமைக்க பெரும் உதவியாக இருக்கும்.

பாதுகாப்பான முதலீடு –  தபால் நிலைய திட்டங்கள் சிறந்த தேர்வு

சேமிப்பு அல்லது முதலீடு செய்ய பெரும்பாலான மக்கள் தேர்வு செய்வது தபால் நிலைய திட்டங்களை (Post Office Scheme) தான். அரசு தபால் நிலையங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் அதில் ஆபத்துகள் குறைவாகவே இருக்கும். முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் அதற்கான பலன்கள் கிடைக்க வேண்டும் என நினைக்கும் நபர்கள் தேர்வு செய்யும் முதன்மையான திட்டமாக அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் உள்ளது.

தபால் நிலைய மாத வருமான திட்டம்

தபால் நிலையங்கள் மூலம் அரசு நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit), தொடர் வைப்பு நிதி திட்டம் (RD – Recurring Deposit), மாத வருமான திட்டம் (Monthly Investment Scheme), தேசிய செமிப்பு திட்டம் (National Saving Certificate), செல்வமகள் சேமிப்பு (Sukanya Samriddhi Yojana) திட்டம் என பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் மாத வருமானத்தை பெரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டம் தான் மாத வருமான திட்டம் (Monthly Income Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானத்தை பெறுவதை போலவே மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை பெற முடியும். இந்த நிலையில், அஞ்சல மாத வருமான திட்டத்தில் மாதம் ரூ.9,000 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதம் ரூ.9,000 பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்

அஞ்சல மாதாந்திர வருமான திட்டம் மொத்தம் 5 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இதில் வெறும் ரூ.1,000 முதலே முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தனியாக தொடங்கப்படும் கணக்குகளில் ரூ.9 லட்சம் வரையும், கூட்டுக்கணக்குகளுக்கு ரூ.15 லட்சம் வரையும் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள் மாதம் ரூ.9,000 வருமானமாக பெற வேண்டும் என்றால் கூட்டுக்கணக்கில் தான் முதலீடு செய்ய வேண்டும். அப்படி, கூட்டுக்கணக்கில் நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு வட்டியாக மாதம் மாதம் ரூ.9,250 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.