அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்.. வட்டி விகிதங்களை சுலபமாக தெரிந்துக்கொள்வது எப்படி?

Post Office Fixed Deposit Schemes | பொதுமக்கள் சேமிப்பதற்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில், அஞ்சல திட்டங்களின் வட்டி விகிதங்களை சுலபமாக தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்.. வட்டி விகிதங்களை சுலபமாக தெரிந்துக்கொள்வது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

27 Apr 2025 18:22 PM

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பொருளாதாரம் (Economy) முக்கியம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரம் பெற வேண்டும் என்றால் அனைவரும் கட்டாம் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்காக பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் சேமிப்பதற்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களுக்கு நல்ல வட்டி விகிதமும் வழங்கப்படுவதால் பலரும் இதில் முதலீடு செய்கின்றனர்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

மற்ற சேமிப்பு திட்டங்களை விடவும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு (Post Office Saving Schemes) அதிக வட்டி வழங்கப்படுவதால் பெரும்பாலான மக்களின் தேர்வாக இந்த திட்டங்கள் உள்ளன. அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும். இதன் காரணமாக அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான சரியான வட்டி விகிதங்கள் குறித்து தெரியாமல் சிலர் குழம்புகின்றனர். இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதங்களை தெரிந்துக்கொள்வது எப்படி?

அஞ்சலகங்கள் மூலம் எட்டு விதமான நிலையான வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும். சில சமயங்களில் இந்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கவும், சில சமயங்களில் இந்த வட்டி விகிதங்கள் குறைக்கவும் செய்யப்படும். இவ்வாறு அவ்வப்போது வட்டி விகிதங்கள் மாற்றப்படுவதால் அதனை அறிந்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எதிர்நிலையில் மக்கள் மிக சுலபமாக வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் துறை சார்பாக ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது.

அஞ்சல திட்டங்களுக்கான வட்டி விதங்களை தெரிந்து கொள்ள, போஸ்ட் இன்ஃபோ (Post Info) என்ற செயலி உள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள இன்ட்ரஸ்ட் கால்குலேட்டர் (Interest Calculator) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் அஞ்சலங்குகள் மூலம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு வைப்பு நிதி திட்டங்களுக்கான விவரமும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு எந்த திட்டத்தில் வட்டி விகிதம் குறித்து தெரிய வேண்டுமோ அதனை கிளிக் செய்து சுலபமாக தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.