Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிஎஃப் கணக்கில் முறையாக வட்டி வரவு வைக்கப்படுகிறதா?.. சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்!

வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் தொடங்கப்படும் கணக்கில் ஊழியர்களுக்கு மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அதற்கான வட்டியானது ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் வரவு வைக்கப்படும். நாம் நம்முடைய பிஎஃப் கணக்கில் வட்டி சேர்க்கப்பட்டதா என்பதை சோதனை செய்வது எப்படி என பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கில் முறையாக வட்டி வரவு வைக்கப்படுகிறதா?.. சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 10 Apr 2025 12:49 PM

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியரகளின் பெயர்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) கீழ் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்களுக்கு மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களும் வழங்கப்படும்.

பிஎஃப் தொகைக்கு வரவு வைக்கப்படும் வட்டி

ஊழியர் வருங்கால வைப்பு நிதியில், ஊழியர்களின் பெயர்களில் தொடங்கப்படும் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும். ஒருவேளை ஊழியர் தங்களது பணி காலம் முழுவதும் பிஎஃப் தொகையை எடுக்கவே இல்லை என்றால், ஓய்வு பெற்ற பிறகு பிஎஃப் தொகை, அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக ஒரு நல்ல தொகையை பெற முடியும். பிஎஃப் தொகைக்கு வட்டி வழங்கப்படுவது சிறப்பு பலன்களை வழங்கும் நிலையில், பிஎஃப் கணக்கில் வட்டி வந்துவிட்டதா என்பதை சோதனை செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கில் வட்டி வந்துவிட்டதா – தெரிந்துக்கொள்வது எப்படி?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் கணக்குகளில் மாதம் மாதம் வரவு வைக்கபப்டும் பணத்திற்கு ஒரு ஆண்டுக்கு ஒருமுறை வட்டி அளிக்கப்படும். தற்போதைய நிலவரத்தின் படி, பிஎஃப் தொகைக்கு 8.25 சதவீதம் வட்டின் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஊழியர்களின் கணக்கில் ஓராண்டு முழுவதும் வரவு வைக்கப்படும் பணத்திற்கான 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படும். மாதம் மாதம் வரவு வைக்கபடும் பணம் மற்றும் அதற்கான வட்டி தொகை ஆக்கியவை சேர்த்து மொத்தமாக நல்ல தொகையை பெற முடியும்.

இபிஎஃப்ஓ இணையதளம்

  1. அதற்கு முதலில் இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ www.epfindia.gov.in  இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு கொடுக்கப்பட்டுள்ள For Employee என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதற்கு கீழ் இருக்கும் Online Service என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் UAN (Universal Account Number), கடவுச்சொல் மற்றும் கேப்ட்ச்சா (Captcha) உள்ளிட்டவற்றை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  4. பிறகு View என்பதை கிளிக் செய்து, Passbook என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அதில் பிஎஃப் கணக்கு பாஸ்புக் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் தோன்றும்.
  6. அதன் மூலம் பிஎஃப் பணம் வரவு வைக்கப்படுகிறதா, அதற்கான வட்டி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

மிஸ்டு கால்

பிஎஃப் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அதற்கு பிறகு மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் பிஎஃப் இருப்பு குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!...
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!...
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?...
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்...
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்...
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!...
பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. முப்படை தளபதிகள் பங்கேற்பு!
பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. முப்படை தளபதிகள் பங்கேற்பு!...
இந்திய வேளாண்மையில் டிஜிட்டல் புரட்சி: பதஞ்சலி ஆராய்ச்சி
இந்திய வேளாண்மையில் டிஜிட்டல் புரட்சி: பதஞ்சலி ஆராய்ச்சி...
இணையத்தில் வைரலாகும் நடிகர் மகேஷ் பாபுவின் நியூ லுக்!
இணையத்தில் வைரலாகும் நடிகர் மகேஷ் பாபுவின் நியூ லுக்!...
பிஎஃ முன்பணம் பெறுவதில் வந்த முக்கிய மாற்றம்!
பிஎஃ முன்பணம் பெறுவதில் வந்த முக்கிய மாற்றம்!...
வரலாற்றுக் கதைக்களத்துடன் புதிய படத்தை இயக்கும் சசிகுமார்!
வரலாற்றுக் கதைக்களத்துடன் புதிய படத்தை இயக்கும் சசிகுமார்!...