சேமிப்பு கணக்கில் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Saving Bank Account Limit | இந்தியாவில் பலர் வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வரவு வைக்கலாம் என்பது குறித்து பலருக்கு தெரியாமல் உள்ளது. வங்கி சேமிப்பு கணக்கை பொருத்தவரௌ ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரித்துறையின் விசாரணைக்கு உள்ளாக நேரிடும்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களது பண பரிவர்த்தனை தேவைகளுக்காக வங்கிகளில் கணக்கு தொடங்குகின்றனர். இந்த வங்கி கணக்குகள் மூலம் நிதி சேமிப்பு (Money Saving), முதலீடு (Investment), பண பரிவர்த்தனை (Money Transaction) உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி கணக்குகளை பொருத்தவரை அதில் பல வகைகள் உள்ளன. அதாவது, கரண்ட் அக்கவுண்ட் (Current Account), சேவிங் அக்கவுண்ட் (Saving Account), சேலரி அக்கவுண்ட் (Salary Account) என வகைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு வகையான வங்கி கணக்கிற்கும் ஒரு சில கட்டாய விதிகள் உள்ளன. அந்த விதிகளை முறையாக பினபற்றி அந்த கணக்குகளை பயன்படுத்த வேண்டும். ஒருவேளை அந்த விதிகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சேமிப்பு கணக்கு மூலம் சிக்கல்களை சந்திக்கலாம்
இந்த ஒவ்வொரு வகையான கணக்குகளும் ஒவ்வொரு தேவைக்காக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், நிதி சேமிப்பை மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள் சிலர் இந்த சேமிப்பு கணக்கில் முதலீடு செய்கின்றனர். இந்த சேமிப்பு கணக்கு சேமிப்பை மையமாக கொண்டு இருந்தாலும் அதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற அளவு உள்ளது. அந்த அளவை மீறி முதலீடு செய்யும் பட்சத்தில் சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், சேமிப்பு கணக்கில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேமிப்பு கணக்கில் அதிகபட்சமாக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
இந்தியாவை பொருத்தவரை சேமிப்பு வங்கி கணக்கில் பெரிய அளவிலான பணத்தை முதலீடு செய்யும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இந்த நிலையில், சேமிப்பு வங்கி கணக்கில் அடிக்கடி அல்லது பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்யப்படும் நிலையில், அது வருமான வரித்துறையின் கவனத்தை உங்கள் மீது செலுத்த வழி வகுத்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே சேமிப்பு கணக்கில் பணத்தை வரவு வைப்பதற்கான நெறிமுறைகளை பின்பற்றி வரவு வைப்பது சிறந்ததாக இருக்கும்.
ரூ.10 லட்சம் வரை மட்டும் தான் அனுமதி
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித்துறை அதிக மதிப்பு கொண்ட பண பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் வழிமுறைகளை கொண்டுள்ளன. அதன்படி, ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வரவு வைக்கப்படும் பண பரிவர்த்தனைகள் குறித்து வங்கிகள் இந்திய ரிசர் வங்கிக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், நீங்கள் சேமிப்பு வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வரவு வைத்தால் அது குறித்து வருமான வரித்துறை உங்களிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பும். ஒருவேளை உங்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.