ஹோம் லோன் வாங்கப்போறீங்களா? இந்த 7 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
Smart Home Loan Guide: சொந்த வீடு வாங்கும் கனவு பலருக்கும் இருக்கிறது. ஆனால் அந்த கனவை நிறைவேற்ற சரியான வீட்டு கடனை தேர்வு செய்வது முக்கியம். வட்டி விகிதம் முதல் மாதத் தவணை வரை, இந்த வீட்டு கடன் பெற எவ்வாறு திட்டமிடலாம் என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
வீடு (Home) கட்டுவது ஒரு மனிதர் தன் வாழ்க்கையில் முக்கியமான குறிக்கோளாக பார்க்கிறார். காரணம் சொந்த வீடு என்பது அவருக்கு மிகப்பெரிய கௌரவத்தை அளிக்கிறது. பாதுகாப்பு, மன நிம்மதி ஆகியவற்றுடன் சொந்த வீடு என்பது அவரது பொருளாதார நிலையைக் குறிக்கிறது. ஆனால் தற்போதையை காலகட்டங்களில் வீடு கட்டுவது மிகவும் சவாலான பணி. கட்டுமான பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் நம் மாத வருமானத்தில் உடனடியாக அதை செய்வது சாத்தியமற்றது. அந்த வகையில் வீட்டுக் கடன் (Home Loan) பலருக்கும் கைகொடுக்கிறது. வீடு கட்ட வாங்கும் கடன் தொகையை மாதத் தவணைகளாக (EMI) திருப்பி செலுத்த முடியும் என்பதால் பாதுகாப்பான திட்டமாக பார்க்கிறது. அதே நேரத்தில் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். மேலும் சில வங்கிகள் மறைமுக கட்டணத்தையும் விதிக்கின்றன. எனவே சரியான ஹோம் லோன் திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.
யாரெல்லாம் வீட்டுக் கடன் பெறலாம்? வட்டி விகிதத்தில் உள்ள வேறுபாடுகள், உங்கள் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டமிடுவது மற்றும் முக்கியமாக நமது கடன் தேவையை எப்படிச் சரியாக நிர்ணயிப்பது? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த தகவல்கள் என்டிடிவி இணையதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
உங்கள் நிதி நிலையை மதிப்பீடு செய்வது அவசியம்
வீட்டு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் மாத வருமானம் எவ்வளவு, ஏற்கனவே நிலுவையிலுள்ள கடன்கள், வீட்டு செலவுகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யுங்கள். இது நமது மாதத் தவணையை நிர்ணயிக்க உதவும்.
வட்டி விகிதங்களை ஒப்பிடுங்கள்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் மாறுபடும். பல்வேறு நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு, உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்யுங்கள்.
வட்டி விகிதத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
நிலையான வட்டி விகிதம்: கடன் காலம் முழுவதும் ஒரே வட்டி விகிதம்.
மாறும் வட்டி விகிதம்: சந்தை நிலைமையின் அடிப்படையில் வட்டி விகிதம் மாறும்.
உங்கள் நிதி நிலைமை மற்றும் மார்கெட் நிலையைப் பொருத்து, சரியான வட்டி விகிதத்தை தேர்வு செய்யுங்கள்.
வங்கிகள் விதிக்கும் கட்டணங்களை கவனிக்கவும்
வீட்டு கடன் பெறுவதற்கு முன் கட்டணம், கடன் தொகையை நமக்கு அளிப்பதற்கான கட்டணம் போன்றவை இருக்கலாம். இவற்றை முழுமையாக புரிந்து கொண்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
கடன் காலத்தை திட்டமிடுங்கள்
கடன் செலுத்தும் காலம் குறைவாக இருந்தால், மாத தவணை அதிகமாக இருக்கும், ஆனால் மொத்த வட்டி செலவு குறையும். உங்கள் மாத வருமானத்தைப் பொருத்து, சரியான கடன் காலத்தை தேர்வு செய்யுங்கள்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் முக்கியம்
உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற வாய்ப்பு அதிகம். உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒப்பிடுங்கள்
பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகள், வட்டி விகிதங்கள், மற்றும் கட்டணங்களை ஒப்பிட்டு, உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்யுங்கள்.