Patanjali: நாக்பூரில் பதஞ்சலியின் மெகா உணவுப்பூங்கா.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்த உணவுப் பூங்காவில் ஒரு நாளைக்கு 800 டன் கொள்ளளவு கொண்ட பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்தும் அலகுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்க உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் உள்ள பதஞ்சலியின் ஆரஞ்சு பதப்படுத்தும் தொழிற்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரியது என்றும், மிகவும் முன்னோடியாக திகழக்கூடியதாகும்.

பதஞ்சலி மெகா உணவுப்பூங்கா
நாக்பூரில் உள்ள மிஹானில் சுமார் ரூ.1,500 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள பதஞ்சலி மெகா உணவு (Patanjali Mega Food & Herbal Park) மற்றும் மூலிகை பூங்காவை வரும் 2025, மார்ச் 9 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் யோகா குரு ராம்தேவ் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த மெகா உணவு பதப்படுத்தும் ஆலை 2025, மார்ச் 9 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உணவுப் பூங்காவில் ஒரு நாளைக்கு 800 டன் கொள்ளளவு கொண்ட பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்தும் அலகுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது இந்த ஆலை இப்பகுதியில் விவசாயப் புரட்சியைக் கொண்டு வரும் என்றும், விதர்பா விவசாயிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
நாக்பூரில் உள்ள பதஞ்சலியின் ஆரஞ்சு பதப்படுத்தும் தொழிற்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரியது என்றும், மிகவும் முன்னோடியாக திகழக்கூடியது என்றும் பால்கிருஷ்ணா கூறினார். ஒரு நாளைக்கு 800 டன் உற்பத்தி திறன் கொண்ட இந்த ஆலை, ஆரஞ்சு மற்றும் அதன் துணைப் பொருட்கள் மற்றும் பிற பழங்களை பதப்படுத்தும் என்று பால்கிருஷ்ணா கூறினார். இந்த வசதி இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலையை மாற்றும் என்றும் அவர் கூறினார்.
ஆரஞ்சு நகரமாக அறியப்பட்டு வரும் பல்வேறு சிட்ரஸ் பழங்களின் வளமுடைய பகுதியாக திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் பதஞ்சலி நிறுவனமானது ஒரு சிறப்பு சிட்ரஸ் செயலாக்க ஆலையை இங்கு நிறுவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலையானது தினசரி 800 டன் பழங்களை ஃப்ரோஸன் ஜூஸாக தயாரிக்கக்கூடிய செயல்திறனை கொண்டுள்ளது. இந்த ஜூஸ் முற்றிலும் இயற்கையானதாக இருக்கும் என்றும், எந்த விதமான இரசாயன பொருட்களும், சர்க்கரையும் சேர்க்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாக்பூரில் பதஞ்சலி நிறுவனத்தின் மாவு ஆலை ஒன்றும் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் 100 டன் அளவுக்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனை மஹாராஷ்டிராவின் ஜல்னா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இடங்களில் உள்ள பதஞ்சலி நிறுவனத்தின் பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.