Fixed Deposit : 1 ஆண்டுக்கான FD திட்டங்கள்.. 8.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
1 Year Fixed Deposit | இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் பல கால அளவீடுகளை கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள வங்கிகள் பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்களை (Fixed Deposit Schemes) செயல்படுத்தி வருகின்றன. பொதுவாக வங்கிகள் வழங்கும் நிலையான வைப்பு நிதி திட்டங்கள் 1 முதல் 5 ஆண்டுகள் வரை கால அளவீடுகளை கொண்டவையாக உள்ளன. வங்கிகள் வெவ்வேறு கால அளவீடுகளை கொண்ட திட்டங்களை வழங்கும் நிலையில், ஒவ்வொரு திட்டத்திற்கு ஒவ்வொரு வகையான வட்டி விகிதம் வழங்கப்படும்.
நிலையான வைப்பு நிதி திட்டங்களை பொருத்தவரை குறைந்த கால அளவீட்டை கொண்ட திட்டங்களை விடவும் அதிக கால அளவீட்டை கொண்ட திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. குறுகிய காலம் மட்டுமே முதலீடு செய்ய விரும்பும் பயனர்களுக்கு இது பயனற்றதாக உள்ளது. இந்த நிலையில் தான் சில வங்கிகள் ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்குகின்றன. அவை எந்த எந்த வங்கிகள், அவற்றில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
1 ஆண்டு திட்டத்திற்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்
1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
AU சிறு நிதி நிறுவன வங்கி
AU சிறு நிதி நிறுவன வங்கி (AU Small Finance Bank) தனது 18 மாத கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.1 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
ஈக்விடாஸ் சிறு நிதி நிறுவன வங்கி
ஈக்விடாஸ் சிறு நிதி நிறுவன வங்கி (Equitas Small Finance Bank) தனது 888 நாட்கள் அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
ஜனா சிறு நிதி நிறுவன வங்கி
ஜனா சிறு நிதி நிறுவன வங்கி (Jana Small Finance Bank) தனது 1 முதல் 3 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
சூர்யோதயா சிறு நிதி நிறுவன வங்கி
சூர்யோதயா சிறு நிதி நிறுவன வங்கி (Suryoday Small Finance Bank) தனது 5 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 8.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
உஜ்ஜிவன் சிறு நிதி நிறுவன வங்கி
உஜ்ஜிவன் சிறு நிதி நிறுவன வங்கி (Ujjivan Small Finance Bank) தனது 1001 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 9 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.