Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருத்துவ செலவுகளுக்கு கைகொடுக்கும் டாப் 5 கிரெடிட் கார்டுகள் – என்ன பயன்?

Credit Card: கிரெடிட் கார்டுகளில் சில் ரிவார்டுகள், கேஷ்பேக் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. கிரெடிட் கார்டுகள் மூலம் விமான டிக்கெட்டுகளை வாங்கும்போது நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. சில கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் வாங்கும் கூடுதல் தள்ளுபடிகளை அளிக்கின்றன. அதே போல கிரெடிட் கார்டுகளினால் சில மருத்துவ நன்மைகளும் இருக்கின்றன. மருத்துவ சிகிச்சைகளின் போது உதவுவதற்காக மெடிக்கல் கிரெடிட் கார்டுகளும் சந்தைகளில் கிடைக்கின்றன.

மருத்துவ செலவுகளுக்கு கைகொடுக்கும் டாப் 5 கிரெடிட் கார்டுகள் – என்ன பயன்?
மருத்துவ செலவுகளுக்கு கைகொடுக்கும் கிரெடிட் கார்டுகள்
karthikeyan-s
Karthikeyan S | Published: 22 Mar 2025 08:50 AM

பொதுவாக கிரெடிட் கார்டுகள் (Credit Card) என்றாலே அதிலிருக்கும் ஆபத்துகள் தான் முதன்மையாக சொல்லப்படும். ஆனால் கிரெடிட் கார்டுகளை சரியாக கையாண்டால் அதிலிருந்து சில நன்மைகளும் இருக்கின்றன. பணத்தட்டுப்பாடு, அவசர செலவுகளுக்கான உடனடி நிதி ஆதாரமாக கிரெடிட் கார்டுகள் செயல்படுகின்றன. கிரெடிட் கார்டுகளில் சில் ரிவார்டுகள், கேஷ்பேக் (Cashback) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. கிரெடிட் கார்டுகள் மூலம் விமான டிக்கெட்டுகளை (Flight Ticket) வாங்கும்போது நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. சில கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் வாங்கும் கூடுதல் தள்ளுபடிகளை அளிக்கின்றன. அதே போல கிரெடிட் கார்டுகளினால் சில மருத்துவ நன்மைகளும் இருக்கின்றன. மருத்துவ சிகிச்சைகளின் போது உதவுவதற்காக மெடிக்கல் கிரெடிட் கார்டுகளும் சந்தைகளில் கிடைக்கின்றன.

அப்போலோ எஸ்பிஐ கிரெடிட் கார்டு (Apollo SBI Credit Card)

இந்த கிரெடிட் கார்டினை அப்போலோவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. இந்த கார்டுக்கு ஆண்டு சந்தாவாக ரூ.499 செலுத்த வேண்டும். இதன் மூலம் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு 10 சதவிகிதம் அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு 100 ரூபாய் அப்போலோவில் செலவிடும் 3 மடங்கு ரிவார்டு பாயிண்டுகளை அளிக்கின்றன. மேலும் இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு அப்போலோ கோல்டு டையர் மற்ம் சில்வர் டையர் மெம்பர்ஷிப் அளிக்கிறது. உலக அளவில் இந்த கார்டு 24 மில்லியன் இடங்களில் செல்லுபடியாகும். ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலவு செய்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் அளிக்கிறது.

ஆக்ஸிஸ் பேங்க் ஆரா கிரெடிட் கார்டு (Axis Bank Aura Credit Card)

இந்த கிரெடிட் கார்டு பிரத்யேகமாக மெடிக்கல் செலவுகளை மேற்கொள்ள உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.749 மற்றும் இணைவதற்கான கட்டணமாக 749 ரூபாயும் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனைகளுக்கு ரூ.500 வரை தள்ளுபடி அளிக்கிறது. பிராக்டோவில் 4 முறை வீடியோ மூலம் மருத்துவர்களிடம் கலந்தாலோசித்துக் கொள்ளலாம். மேலும் 750 ரூபாய் அளவுக்கு டெக்கத்லானில் பொருட்களை வாங்க பரிசு கூப்பனை பெறலாம். நியூட்ரிசனிஸ்ட்டிடம் கலந்தாலோசிக்க 30 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்.

யெஸ் பேங்க் வெல்னஸ் கிரெடிட் கார்டு (Yes Bank Wellness Credit Card)

இந்த கார்டு உடல் பரிசோதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்டை பயன்படுத்த ஆண்டு சந்தாவாக ரூ. 749 செலுத்த வேண்டும். இந்த சந்தா குறிப்பிட்ட சில ஆண்டு இலவச உடல் பரிசோதனைகளை மேற்கொள்கிறது. மேலும் ஆண்டு கண் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை வழங்குகிறது. யோகா, ஜிம் போன்ற 6 முறை இலவச உடற்பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளலாம்

யெஸ் பேங்க் வெல்னஸ் பிளஸ் கிரெடிட் கார்டு (Yes Bank Wellness Plus Credit Card)

இந்த கார்டை பயன்படுத்த ரூ. 1499 ஆண்டு சந்தாவாக செலுத்த வேண்டும். இந்த கார்டு சில இலவச மருத்துவ பரிசோதனைகளை வழங்குகிறது. மாதத்துக்கு 12 முறை இலவச உடற்பயிற்சி வகுப்புகளை நாம் பங்கேற்க முடியும். மேலும் விமான விபத்தில் மரணமடைந்தால் ரூ.1கோடி வரை கிடைக்கும் லைப் இன்சூரன்ஸை வழங்குகிறது. வெளிநாடுகளுக்கு செல்கையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 இன்சூரன்ஸ் சலுகை கிடைக்கும்.

எஸ்பிஐ பல்ஸ் கிரெடிட் கார்டு (SBI Pulse Credit Card)

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள இந்த கிரெடிட் கார்டு மருத்துவம் மட்டும் இல்லாமல் பொழுதுபோக்கு, பயணம், போன்றவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டை பெறவும் ஆண்டு சந்தாவாகவும் ரூ.1499 செலுத்த வேண்டும். இந்த கார்டுதாரர்களுக்கு ஒரு வருடத்துக்கான நெட்மெட்ஸ் (NetMeds) மற்றும் ஃபிட்பாஸ் ப்ரோ (FITPASS PRO) உறுப்பினர் வாய்ப்பு கிடைக்கும். மெடிக்கல் கடைகளில், உணவகங்களில் பொழுதுபோக்கு என ரூ.100 செலவிடுபவர்களுக்கு 10 ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும்.

திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை: ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும்?
திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை: ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும்?...
காணாமல் போன இந்திய மாணவி.. கனடாவில் சடலமாக மீட்பு!
காணாமல் போன இந்திய மாணவி.. கனடாவில் சடலமாக மீட்பு!...
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!...
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி...
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?...
"இனி இப்படியெல்லாம் செய்யாதீங்க" தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?...
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்...
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்...
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ...