Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருத்துவக் காப்பீடை தேர்ந்தெடுப்பது எப்படி? அதில் என்ன சிக்கல் வரும்?

Health Insurance: ஒருவரின் உடல் நலம் திடீரென பாதிக்கப்படும் தருவாயில் அவர்களது குடும்பம் பொருளாதரா சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மருத்துவக் காப்பீடு என்பது பரிசோதனை, மருத்துவமனையில் (Hospital) அனுமதிக்கப்படும் செலவு, சிகிச்சைக்கான செலவு, மருந்துகளுக்கான செலவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீடை தேர்ந்தெடுப்பது எப்படி? அதில் என்ன சிக்கல் வரும்?
மருத்துவக் காப்பீடு
karthikeyan-s
Karthikeyan S | Published: 22 Mar 2025 03:46 AM

மருத்துவக் காப்பீடு (Health Insurance) என்பது, ஒருவருக்கு மருத்துவ சிகிச்சையின் போது அவருக்கு பணம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக ஒருவர் சரியான மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தால் அவர்கள் எதிர்காலம் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. ஒருவரின் உடல் நலம் திடீரென பாதிக்கப்படும் தருவாயில் அவர்களது குடும்பம் பொருளாதரா சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மருத்துவக் காப்பீடு என்பது பரிசோதனை, மருத்துவமனையில் (Hospital) அனுமதிக்கப்படும் செலவு, சிகிச்சைக்கான செலவு, மருந்துகளுக்கான செலவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒருவர் சரியான மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்வது பெரும் சிக்கலான நடைமுறையாக மாறிவருகிறது. காரணம் அதில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

சுகாதார காப்பீட்டு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் குறிப்புகள்:

ஒருவர் மருத்துவக் காப்பீடு பெற அதன் கால அளவு, அளிக்கப்படும் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். பல விதமான மருத்துவக் காப்பீடுகளை ஒப்பிட்டு அதில் எது நமக்கு சரியான தேர்வாக இருக்கும் என கணிப்பது முக்கியம். மருத்துவ காப்பீடுகளில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டுமே அது செல்லுபடியாகும் என்ற விதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது காப்பீடு செல்லுபடியாகும் காலம் அதிகமாக இருக்கும். மருத்துவக் காப்பீட்டை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

காப்பீட்டு தொகை

காப்பீட்டுத் தொகையை கவனத்தில் கொள்வது அவசியம். எவ்வளவு காப்பீட்டுத் தொகை அதற்கு எவ்வளவு பிரீமியம் செலுத்துவது உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டும். அதிகபட்ச காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை தேர்ந்தெடுப்பதே நல்லது.

காப்பீட்டு கவரேஜ்

காப்பீடு கவரேஜ் என்பது காப்பீட்டு தொகை பெற தகுதி. அதில் எந்தவிதமான நோய்களுக்கு யாருக்கெல்லாம் கவரேஜ் செல்லுபடியாகும், அது நமக்கு ஏற்றதா என்று யோசித்து தேர்ந்தெடுப்பது நல்லது. நமது உடல் நலம், குடும்ப வரலாறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுப்பது நலம்.

காத்திருப்பு காலம்

மருத்துவக் காப்பீடுகளில் காத்திருப்பு காலம் மிக முக்கியமானது. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் காலத்துக்கு முன் கூட்டியே நாம் காப்பீட்டுத் தொகையை கோரினால் நிராகரிக்கப்படுவோம். சில நிறுவனங்கள் 0 காத்திருப்பு காலத்தை வழங்குகின்றன. அதாவது நீங்கள் காப்பீட்டுத் தொகையை காத்திருக்க தேவையில்லை. உடனடியாக உங்களுக்கு கிடைக்கும். சில நிறுவனங்கள் 4 ஆண்டுகள் வரை காத்திருப்பு காலம் வழங்குகின்றன. இதனால் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும்.

கோ-பேமெண்ட் விதி

இதில் சில காப்பீடுகளில் காப்பீடுதாரரும் மருத்துவ செலவுக்கு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டியிருக்கும். மூத்த குடி மக்களுக்கு இந்த விதி பொறுந்தும் என்று கூறப்படுகிறது. அதனால் கவனமாக திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ப்ரீ-எக்சிஸ்டிங் டிசீஸ் கவர் (Pre-existing Disease Coverage):

உங்களிடம் ஏற்கனவே உள்ள நோய்களை கருத்தில் கொண்டு, அவற்றிற்கான காப்பீடு செல்லுபடியாகும் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலும் இதனை பெற 1 முதல் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

பிளான் ஃபிளெக்ஸிபிலிட்டி (Plan Flexibility):

பல திட்டங்கள், குடும்ப உறுப்பினர்களை சேர்க்கும் உரிமையை வழங்குகின்றன. குடும்ப உறுப்பினரை சேர்க்கும் போது, காத்திருப்பு காலம் இல்லாமல் உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சப்-லிமிட்கள் (Sub-limits):

சில காப்பீட்டு கொள்கைகள், மருத்துவமனை அறை வாடகை போன்றவற்றிற்கு சப்-லிமிட்களை அளிக்கின்றன. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, அறை வாடகை கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு 35 வீரர்கள் தேர்வு! யார் கேப்டன்?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு 35 வீரர்கள் தேர்வு! யார் கேப்டன்?...
நண்பன் உடையான் படைக்கு அஞ்சான்... நடிகர் சந்தானம் வெளியிட்ட பதிவு
நண்பன் உடையான் படைக்கு அஞ்சான்... நடிகர் சந்தானம் வெளியிட்ட பதிவு...
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!...
இனி இந்திய குடியுரிமையை நிரூபிக்க இந்த 2 சான்றிதழ்கள் கட்டாயம்!
இனி இந்திய குடியுரிமையை நிரூபிக்க இந்த 2 சான்றிதழ்கள் கட்டாயம்!...
வாழ்க்கையை மாற்றிய ரமண மகரிஷி.. நடிகர் வெங்கடேஷின் ஆன்மிக அனுபவம்
வாழ்க்கையை மாற்றிய ரமண மகரிஷி.. நடிகர் வெங்கடேஷின் ஆன்மிக அனுபவம்...
சினிமாவில் ரிஸ்க் எடுப்பது அத்தியாவசியம்... நடிகை சமந்தா
சினிமாவில் ரிஸ்க் எடுப்பது அத்தியாவசியம்... நடிகை சமந்தா...
'ஜெயிலர் 2' படத்தில் ரஜினியுடன் இணையும் பிரபலங்கள் யார்?
'ஜெயிலர் 2' படத்தில் ரஜினியுடன் இணையும் பிரபலங்கள் யார்?...
சிம்புவின் STR51 படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
சிம்புவின் STR51 படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து...
கோடையில் குட் நியூஸ்! குறையப்போகும் வெயில்.. மழைக்கு வாய்ப்பு..!
கோடையில் குட் நியூஸ்! குறையப்போகும் வெயில்.. மழைக்கு வாய்ப்பு..!...
Google Pay வழங்கும் பெர்சனல் லோன் - பெறுவது எப்படி?
Google Pay வழங்கும் பெர்சனல் லோன் - பெறுவது எப்படி?...
வெளியானது நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ட்ரெய்லர்
வெளியானது நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ட்ரெய்லர்...