குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் – பணியாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

Group Health Insurance: தனி ஹெல்த் இன்சூரன்ஸிற்கும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸிற்கும் உள்ள வித்தியாசம், குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகள் மற்றும் பிரச்னைகள் ஆகியவற்றை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். மேலும் பணியாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் - பணியாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

மாதிரி புகைப்படம்

Published: 

12 Apr 2025 15:39 PM

பணியாளர்கள் (Employees) தங்கள் மாத வருமானத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்படுகின்றனர். அவர்களால் லட்சக் கணக்கில் மருத்துவ செலவுகள் செய்வது இயலாத காரியம். இதனால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.  இந்த நிலையில் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை (Group Health Insurance) வழங்குகின்றன. இது பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் மருத்துவ செலவுகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. காப்பீடு திட்டத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதும் அதற்கு பின்பும் பணியாளர்களை செலவினங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க உதவுகிறது. பல நிறுவனங்கள் பணியாளர்கள் தங்களின் பெற்றோர்கள், மனைவி, கணவர், குழந்தைகள் போன்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து காப்பீடு வழங்குகின்றன. குடும்பத்தினருக்கு ஏற்படும் திடீர் மருத்துவ செலவுகளுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. இதனால் பணியாளர்களுக்கான மருத்துவ செலவுகளுக்கான சுமையைக் குறைக்கின்றன.

தனி நபர் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் எடுத்திருந்தால் அவர் தனது குடும்பங்களையும் அதில் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரை அதற்கான ப்ரீமியம் தொகையை செலுத்த வேண்டும். நமது விருப்பத்திற்கேற்ப திட்டங்களை செலுத்த வேண்டும். அதாவது நாம் இன்சூரன்ஸில் எந்தநெந்த நோய்களுக்கானது, எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கலாம். நமக்கு தேவையான திட்டங்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் பெரிதும் பலனளிக்கும். அதனால் குடும்ப வரலாறு அடிப்படையில் சில குறிப்பிட்ட நோய்களுக்கான கவரேஜை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் இது நமக்கு நிதி சுமையை அளிக்கும்.

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகளும் சிக்கல்களும்

குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒரு நிறுவனம் இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ வழங்கப்படும். பெரும்பாலும் காத்திருப்பு காலம் இன்றி உங்களால் உனடியாக கிளைம் செய்துகொள்ள முடியும். ஆனால் விருப்பத்திற்கு உங்களால் திட்டங்களை மாற்றிக்கொள்ள முடியாது. இதனால் சில குறிப்பிட்ட சில நோய்களுக்கான கவரேஜ் கிடைக்காது என்பதால் நீங்கள் அதற்கு தனியாக பணம் செலுத்தி சிகிச்சை பெற வேண்டியிருக்கும். நாம் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலையில் இருந்தால் மட்டுமே இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒருவேளை நாம் பணியில் இருந்தால் இன்சூரன்ஸிற்கான பலன் நமக்கு கிடைக்காது.

தனி ஹெல்த் இன்சூன்ஸ் மற்றும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் – எது சிறந்தது ?

தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ்  இரண்டும் தனித்தனி நன்மைகள் கொண்டவை. குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் குறைந்த செலவில் பாதுகாப்பு தரும், ஆனால் அது நமது  வேலையில் இருந்து விலகியதும் அதன் வேலிட்டியும் முடிவடைகிறது. எனவே, நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், உங்கள் நீண்டகால பாதுகாப்புக்காக தனிப்பட்ட மருத்துவக் காப்பீடு ஒன்றை எடுத்துக்கொள்ளுவது சிறந்தது. மருத்துவ செலவுகள் எதிர்பாராத நேரத்தில் வரக்கூடியவை. அதற்கான நிதி பாதுகாப்பை அளிக்கக் கூடியது இன்சூரன்ஸ்.