அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம்.. முழு விவரம் இதோ!

Post Office Saving Scheme | பொதுமக்களின் நலனுக்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்கப்படுவதால் ஏராளமான மக்கள் இவற்றில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம்.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

05 Apr 2025 21:26 PM

சேமிப்பு (Saving) எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் சிறப்பான நடவடிக்கை என்பதால் சிறுவயது முதலே சேமிக்கும் பழத்தை, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றனர். இதேபோல சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்த பொதுமக்களும் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். அவ்வாறு சேமிப்பை தொடங்க நினைக்கும் பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக இருப்பது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் (Post Office Saving Scheme) தான்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை திருத்திய அரசு

அரசு பொதுமக்களின் நலனுக்காக, அவர்கள் தங்களது எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் சேமிப்பதற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களில் சிறந்த லாபம் கிடைக்கும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் அரசு, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. எனவே அஞ்சல சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்

  1. அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund) திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  2. தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC – National Saving Certificate) திட்டத்திற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  3. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு (SCSS – Senior Citizen Saving Scheme) 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  4. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  5. 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி (1 Year Fixed Deposit) திட்டத்திற்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  6. 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி (2 Year Fixed Deposit) திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  7. 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி (3 Year Fixed Deposit) திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  8. 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி (5 Year Fixed Deposit) திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  9. 5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்பு நிதி (5 Years Recurring Deposit) திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  10. மாதாந்திர வருமான திட்டத்திற்கு (MIS – Monthly Income Scheme) 7.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  11. கிசான் விகாஸ் பத்திரம் (KVP – Kisan Vikas Patra) திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  12. சேமிப்பு வைப்பு திட்டத்திற்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரையிலான காலக்கட்டத்திற்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.