Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gold Price : ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை.. ரூ.70,000 நெருங்கியதால் பொதுமக்கள் ஷாக்!

Gold Price Rapidly Increased in Chennai | தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 11, 2025) ஒரே நாளில் ரூ.1,480 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடும் விலை உயர்வு காரணமாக தங்கம் விலை ரூ.77,000-த்தை எட்டியுள்ளது.

Gold Price : ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை.. ரூ.70,000 நெருங்கியதால் பொதுமக்கள் ஷாக்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2025 10:26 AM

சென்னை, ஏப்ரல் 11 : சென்னையில் இன்று (ஏப்ரல் 11, 2025) ஒரே நாளில் தங்கம் விலை (Gold Price) அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 10, 2025) முதல் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.1,500 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன, தங்கம் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் தங்கம் விலை

2024 ஆம் ஆண்டு தங்கம் விலை 30 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு அத்தகைய பெரிய மாற்றம் எதுவும் நிகழாது என்றும், தங்கம் விலை மெதுவாக உயரும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனம் ஆண்டின் தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்து வருகிறது. 2025, ஜனவரி முதல் ஏப்ரல் காலக்கட்டத்திற்குள் தங்கம் விலை சுமார் ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.

தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கம் விலை

  • ஏப்ரல் 1, 2025 அன்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,510-க்கும் ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 2, 2025 அன்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,510-க்கும் ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 3, 2025  அன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560-க்கும் ஒரு சவரன் ரூ.68,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 4, 2025 அன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.8,400-க்கும் ஒரு சவரன் ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 5, 2025 அன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும் ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 6, 2025 அன்று விலையில் மாற்றமின்றி 22 காரட் தங்கம்  கிராம் ரூ.8,310-க்கும் ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 7, 2025 அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.8,285-க்கும் ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 8, 2025 அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,225-க்கும் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 9, 2025 அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,410-க்கும் ஒரு சவரன் ரூ.67,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 10, 2025 அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560-க்கும் ஒரு சவரன் ரூ.68,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 11, 2025 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும் ஒரு சவரன் ரூ.69,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் நிலவரம்

சென்னையில் இன்று (ஏப்ரல் 11, 2025) ஒரு கிராம் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை ரூ.70,000-த்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை மீண்டும் உயரும் பட்சத்தில் ரூ.70,000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுவதற்காக வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?
அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?...
போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்த போப் யார்?
போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்த போப் யார்?...
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?...
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!...
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?...
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்..
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்.....
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்......
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!...
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?...