பெருமூச்சு விட்ட சாமானியர்கள்.. ரூ.9,000-ல் இருந்து இறங்கிய தங்கம் விலை!

Gold Price Decreased in Chennai After 7 Days | சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், 7 நாட்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல் 28, 2025) விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெருமூச்சு விட்ட சாமானியர்கள்.. ரூ.9,000-ல் இருந்து இறங்கிய தங்கம் விலை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Apr 2025 13:33 PM

சென்னை, ஏப்ரல் 28 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக ஒரு கிராம் ரூ.9,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 7 நாட்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல் 28, 2025) விலை குறைந்துள்ளது. தங்கத்தின் தொடர் விலை உயர்வு சாமானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்திய நிலையில், இன்றைய விலை குறைப்பு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்தும் சவரனுக்கு ரூ.520 குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் விலை உயர்வை சந்தித்து வந்த தங்கம் விலை

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு 30 சதவீதம் வரை உயர்ந்த தங்கம் விலை, இந்த ஆண்டு மேலும் உயர்வை அடைந்து வருகிறது. அதாவது, 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜனவரி 1, 2025 அன்று ரூ.7,150 ஆக இருந்த ஒரு கிராம் 22 காரட் தங்கம் நேற்று (ஏப்ரல் 27, 2025) ரூ.9,005 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதாவது, 4 மாதங்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2,000 வரை அதிகரித்துள்ளது. தங்கம் விலை இவ்வாறு கடும் உயர்வை அடைந்து வந்தால் ஒரு கிராம் ரூ.10,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை தற்போது சற்று குறைந்துள்ளது.

7 நாட்கள் தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை

  • 21 ஏப்ரல் 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,015-க்கும் ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 22 ஏப்ரல் 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,290-க்கும் ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 23 ஏப்ரல் 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,015-க்கும் ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 24 ஏப்ரல் 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 25 ஏப்ரல் 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 26 ஏப்ரல் 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 27 ஏப்ரல் 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • இன்று (ஏப்ரல் 28, 2025)  ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.8,940-க்கும் ஒரு சவரன் ரூ.71,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் ரூ.500 குறைந்த தங்கம்  விலை

சென்னையின் இன்று (ஏப்ரல் 28, 2025) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கும் சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ. 71,520-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.