வரலாறு காணாத உச்சத்தை அடைந்த தங்கம் விலை.. ரூ.71,000-த்தை தாண்டியது!

Gold Price Rapidly Increased in Chennai | சென்னையில் இன்று (ஏப்ரல் 17, 2025) இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தங்கம் விலை அடைந்துள்ளது. அதாவது தங்கம் விலை ரூ.71,000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாறு காணாத உச்சத்தை அடைந்த தங்கம் விலை.. ரூ.71,000-த்தை தாண்டியது!

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Apr 2025 10:32 AM

சென்னை, ஏப்ரல் 17 : சென்னையில் இன்று (ஏப்ரல் 17, 2025) தங்கம் விலை (Gold Price) இதுவரை இல்லாத அளவு உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து உயரும் தங்கம்  விலை

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கடும் உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை இவ்வாறு கடும் விலை உயர்வை கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 4 மாதங்களில் மட்டும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. அதாவது, இந்த 4 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சுமார் ரூ.10,000-க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 17, 2025) ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.840 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

10 நாட்களில் ரூ.6,000 வரை உயர்ந்த தங்கம் விலை

தேதி  1 கிராம் (22 காரட்)  8 கிராம் (22 காரட்) 
ஏப்ரல் 8, 2025 ரூ.8,225 ரூ.65,800
ஏப்ரல் 9, 2025 ரூ.8,410 ரூ.67,280
ஏப்ரல் 10, 2025 ரூ.8,560 ரூ.68,480
ஏப்ரல் 11, 2025 ரூ.8,745 ரூ.69,960
ஏப்ரல் 12, 2025 ரூ.8,770 ரூ.70,160
ஏப்ரல் 13, 2025 ரூ.8,770 ரூ.70,160
ஏப்ரல் 14, 2025 ரூ.8,755 ரூ.70,040
ஏப்ரல் 15, 2025 ரூ.8,720 ரூ.69,760
ஏப்ரல் 16, 2025 ரூ.8,815 ரூ.70,520
ஏப்ரல் 17, 2025 ரூ.8,920 ரூ.71,360

ஏப்ரல் 8, 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,225-க்கும் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 9, 2025 அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,410-க்கும், ஒரு சவரன் ரூ.67,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர், நேற்று (ஏப்ரல் 16, 2025) வரை ரூ.70,000 ஆக நீடித்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.71,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ரூ.1,20,000-த்தை தாண்டும் – கோல்டுமேன் சாக்ஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ரூ.1,20,780 தாண்டும் என்று கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனம் கூறியிருந்தது. இந்த நிலையில், தொடர் தங்கம் விலை உயர்வு அதனை உண்மையாக மாற்றிவிடும் அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.