வட்டி மட்டுமே 2.50 லட்சம்.. அஞ்சல FD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம் இதோ!

Post Office FD Scheme | அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டுமே ரூ.2.5 லட்சம் பெறுவது எப்படி, அதற்கு எந்த திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வட்டி மட்டுமே 2.50 லட்சம்.. அஞ்சல FD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

02 Apr 2025 16:36 PM

பண வீக்கம், விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை பெற வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும். மாத வருமானத்தை தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அது நிதி சிக்கல்களை சந்திக்க வைத்துவிடும். எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க வேண்டும் என்றால் கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும்.

நிதி பாதுகாப்புடன் கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்துள்ள பெரும்பாலான பொதுமக்கள் சேமிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், எந்த திட்டத்தில் முதலீடு செய்வது, திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா, நிதி சிக்கல்கள் ஏற்படுமா என்றெல்லாம் பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுகிறது. சில முதலீடு திட்டங்கள் நிதி பாதுகாப்பை வழங்காமல் இருக்கலாம். ஆனால், அஞ்சலங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் நிதி பாதுகாப்பு மற்றும் சிறந்த லாபத்தை தரக்கூடியவையாக உள்ளன.

பாதுகாப்பான அஞ்சல சேமிப்பு திட்டங்கள்

அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit). இது அரசால் அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நிலையான வைப்பு நிதி திட்டங்களை பொருத்தவரை 1 ஆண்டுக்கான திட்டம், 2 ஆண்டுக்கான திட்டம், 3 ஆண்டுக்கான திட்டம் மற்றும் 5 ஆண்டுக்கான திட்டம் என பல கால அளவீடுகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கான இந்த அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ. 6 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

அஞ்சலக FD திட்டத்தில் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

5 ஆண்டுகளுக்கான அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது அவர்களுக்கு சிறந்த பலன்களை தரும். காரணம், நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொருத்தவரை அதிக வட்டியுள்ள திட்டங்கள் அதிக லாபத்தை வழங்கும்.

சரி, இப்போது இந்த 5 ஆண்டுகளுக்கான அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.6 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு வட்டியாக மட்டும் ரூ.2,69,969 கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.6 லட்சம் சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.8,69,969 பெற்றுக்கொள்ளலாம். முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டுமே ரூ.2,69,969 பெற உதவும் சிறந்த திட்டமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.