பதஞ்சலி உணவு மற்றும் மூலிகைப் பூங்கா.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Patanjali : மகாராஷ்டிராவின் நாக்பூரில் பதஞ்சலி உணவு மற்றும் மூலிகைப் பூங்கா திறக்கப்பட்டது. இந்த தொடக்க நிகழ்வில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதஞ்சலி
பதஞ்சலி உணவு மற்றும் மூலிகைப் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் இந்த பூங்கா எப்படி திறக்கப்பட்டது. முன்னோட்டமாக நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து பேசினார். இது குறித்து பேசிய அவர், ” மக்களின் சார்பாக, பாபா ராம்தேவ் ஜி மற்றும் நமது ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஜி ஆகியோருக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 9 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இந்த மெகா உணவு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினோம் என்பதை நான் நினைவில் கொள்கிறேன். பல பிரச்சனைகள் எழுந்தன, நான் ராம்தேவ் மற்றும் ஆச்சார்யாவிடம் பேசும்போதெல்லாம், அவர்கள் நாக்பூரைப் பற்றி நான் கவலைப்பட வேண்டாம், நாங்கள் அங்கேயே வேலையை முடிப்போம் என்று சொன்னார்கள், இன்று அதை முடித்துள்ளதன் மூலம் அவர்களும் அதை நிரூபித்துள்ளார்கள் என்றார்.
நாங்கள் நிலத்தை இலவசமாகக் கொடுக்கவில்லை
மேலும் பேசிய அவர், ”பாபா ராம்தேவை நாக்பூருக்கு வருமாறு நாங்கள் அழைத்த நேரத்தில், பல மாநில அரசுகள் அவருக்கு இலவச நிலம் வழங்கி அவரை அவர்வர்கள் மாநிலத்துக்கு அழைத்தனர். ஆனால் பாபா ராம்தே நாக்பூருக்கு வருவதாக சொன்னார்.
அதே நேரத்தில் நாங்கள் எந்த இலவச நிலத்தையும் வழங்கவில்லை, டெண்டரும் வழங்கவில்லை. நாங்கள் வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டியிருந்தது, எனவே நிலத்திற்கு அதிக விலை கொடுப்பவருக்கு மட்டுமே நிலம் வழங்கப்படும் என்று நாங்கள் கூறினோம். எங்கள் விருப்பம் என்னவென்றால், அந்த நிலம் உங்களுக்கு மிக உயர்ந்த விலை கொடுத்து வழங்கப்பட வேண்டும் என்பதே. இந்த சவாலை பாபா ராம்தேவ் ஏற்றுக்கொண்டார். இதற்காக நாங்கள் மூன்று முறை டெண்டர் விட்டோம், மூன்று முறையும் பதஞ்சலியைத் தவிர வேறு யாரும் அதைப் பெற முன்வரவில்லை.
இந்தப் பூங்காவில், ஆரஞ்சுப் பழங்களை அறுவடை செய்வதிலிருந்து பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் செய்வது வரை முழு செயல்முறையும் ஒரே இடத்தில் நடைபெறும். இது ஆரஞ்சு வீணாவதைக் குறைக்கும், மேலும் விவசாயிகள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். பதஞ்சலி அனைத்து வகையான ஆரஞ்சுகளையும், அவற்றின் அளவு அல்லது தரம் எதுவாக இருந்தாலும் பயன்படுத்தும். மேலும், தோல் மற்றும் தானியங்களைப் பயன்படுத்துவதன் மூலம், வீணாவது தடுக்கப்பட்டு, அதிகபட்ச உற்பத்தி உருவாகும்.
இந்தப் பூங்காவில் நவீன குளிர்பதனக் கிடங்கு வசதிகளும் இருக்கும், அங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பாதுகாப்பாக வைத்து, எப்போது வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். இது சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும். மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், பதஞ்சலி இங்கு ஆரஞ்சு செடிகளை வளர்க்கக்கூடிய ஒரு நர்சரியையும் அமைக்கும். இது இந்தப் பகுதியில் ஆரஞ்சு உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆரஞ்சு வாரியத்தை அமைப்பதற்கான அறிவிப்பு ஆரஞ்சு உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் உதவியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.