EPFO – ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!
சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி ஆணையம் சில முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளதால், ஓய்வூதிய திட்டங்கள் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். குறைந்தபட்ச சேவை காலம், வயது வரம்பு, முன்கூட்டியே பெற விரும்பும் அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி ஆணையம் சில முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளதால், ஓய்வூதிய திட்டங்கள் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். குறைந்தபட்ச சேவை காலம், வயது வரம்பு, முன்கூட்டியே பெற விரும்பும் அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) என்பது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாகும், இது முக்கியமாக ஊழியர்களின் ஓய்வூதிய பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் மாதம் தோறும் தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வருங்கால வைப்பு கணக்கில் செலுத்த வேண்டும், அதே அளவு பணத்தை நாம் பணியாற்றும் நிறுவனமும் செலுத்தும். வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இதை நிர்வகிக்கிறது. இது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது: வருங்கால வைப்பு நிதி (Employee Provident Fund) மற்றும் பென்சன் திட்டத்திற்காகவும் (Employee Pension Scheme) பிரித்து சேமிக்கப்படும். வருங்கால வைப்பு நிதிக்காக பிடிக்கப்படும் பணத்தை பணி ஓய்வுக்குப் பிறகு பெறலாம். அதே போல பென்சன் திட்டத்தில் பிடிக்கப்படும் பணத்தை ஓய்வூதியமாக பெறலாம். முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு குறிப்பிட்ட வட்டியும் கிடைக்கும், இது நிதி பாதுகாப்பை உறுதிசெய்யும்.
ஊழியர்களின் நிதி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சேமிப்பை ஊக்குவிப்பதில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மிக முக்கியமான ஒரு அமைப்பாக செயல்படுகிறது. சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி ஆணையம் சில முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளதால், ஓய்வூதிய திட்டங்கள் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். குறைந்தபட்ச சேவை காலம், வயது வரம்பு, முன்கூட்டியே பெற விரும்பும் அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு, சம்பள அளவு, சேவைக் காலம் ஆகியவை ஓய்வூதியத் தொகையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.
ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
- ஒரு ஊழியர் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், 50 வயதில் ஓய்வூதியத் திட்டத்திற்குத் தகுதி பெறலாம். இதை பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
- மேலும் தனது 60 வயது வரை ஓய்வூதிய கோரிக்கையை ஒத்திவைக்கலாம், இதனால் ஒவ்வொரு வருடமும் 8% அதிக ஓய்வூதிய தொகையை பெறலாம். இது ஓய்வூதியத்தை அதிகப்படுத்தும் ஒரு சிறந்த வழியாகும்.
- ஊழியர்களின் 12% பங்களிப்பில் 8.33% பென்சன் திட்டத்திற்க்காகவும், மீதமுள்ள 3.67% வருங்கால வைப்பு நிதிக்காகவும் செலுத்தப்படுகிறது.
- ஒருவர் 50 வயதிலிருந்து முன்கூட்டியே ஓய்வூதியம் பெறலாம், ஆனால் இதில் நாம் பெறும் தொகை குறைவாக இருக்கும் என்பதால், தீர்மானிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
- ஊழியர்கள் தாங்களாகவே அதிகமாக பங்களிக்கலாம். அதாவது தாமாகவே தங்களது ஊதியத்தில் இருந்தும் பிடித்தம் செய்யும் தொகையை அதிகரித்து வழங்கலாம். ஆனால் நம் பணியாற்றும் நிறுவனங்கள் அதனை செய்ய முடியாது.
ஏன் இந்த தகவல்கள் முக்கியம்?
EPFO-வின் விதிமுறைகள் மற்றும் தகுதிகள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டால், ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய திட்டங்களை சிறப்பாகத் திட்டமிடலாம். இதன் மூலம் சேமிப்பை அதிகப்படுத்த வேண்டுமா? அல்லது அதிக ஓய்வூதியம் பெற ஓய்வூதியம் பெறும் கோரிக்கையை தாமதப்படுத்த வேண்டுமா என்பது குறித்து முன் கூட்டியே சிந்திக்க உதவும். குறிப்பாக அதிக பலன்களைப் பெறுவதற்காக ஓய்வூதியத்தை தள்ளிவைப்பது உங்களது நிதி இலக்குகளுக்கு பொருந்துமா என்பதை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். தனிப்பட்ட முதலீடுகளுடன், வருங்கால வைப்பு நிதி திட்டங்களையும் இணைத்துப் பயன்படுத்தினால் ஓய்வூதிய காலத்தில் நிதி சிக்கலின்றி வாழ முடியும்.