உங்கள் EPFO கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணம் என்ன? மீண்டும் எப்படி விண்ணப்பிப்பது?

EPFO Claim Tips : வேலையை விட்டு வெளியேறும்போது, மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில சமயங்களில் நமது கோரிக்கை நிராகரிக்கப்படலாம். பிஎஃப் கோரிக்கை ஏன் நிராகரிக்கப்படுகிறது? மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உங்கள் EPFO கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணம் என்ன? மீண்டும் எப்படி விண்ணப்பிப்பது?

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Apr 2025 14:51 PM

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund Organisation) எனப்படும் இபிஎஃப்ஓ (EPFO), பணியாலர்களின் எதிர்கால நிதி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம், இந்தியாவில் (India) நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை சேமிக்கப்படும். இதற்காக நிறுவனங்கள் பணியாளர்களுக்காக ஒரு நிதியும் பணியாளர்கள் தங்கள் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும் அளிக்க வேண்டும். அது பாதுகாப்பான சேமிப்பாக அமைவதோடு எதிர்காலத்தில் பணியாளர்களின் நிதி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருக்கும்போதோ, மருத்துவ செலவுகள் உள்ளிட்ட அவசர தேவைகளின் போதோ குறிப்பிட்ட தொகையை நம் பிஎஃப் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.

அதற்கான பணத்தை வருங்கால வைப்புநிதி அலுவலகத்திலோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். அப்படி Claim செய்யும் போது சமயங்களில் குறிப்பிட்ட சிலகாரணங்களுக்காக நமது கோரிக்கை நிராகரிக்கப்படலாம். இதற்கான காரணங்களும் சரியான முறையில் எப்படி பெறுவது குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான பொதுவான காரணங்கள்

நமது வருங்கால வைப்பு நிதி கோரிக்கைகள் பல காரணங்களால் நிராகரிக்கப்படலாம். அவற்றில் முக்கியமானவை:

  • வங்கி கணக்கு விவரங்கள் தவறாக இருக்கும் போது நமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். குறிப்பாக நமது வங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகியவை தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் நமது கோரிக்கை நிராகரிக்கப்படாலம்.
  • நமது பிஎஃப் கணக்கில் உள்ள பெயரானது ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயருடன் பொருந்தவில்லை என்றாலும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.  இனிஷியல் போன்ற சிறிய மாற்றங்கள் இருந்தாலும் நமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • நமது ஆதார் வங்கி விவரங்கள், பிஎஃப் கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றாலும் நமது கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
  • தவறான கோரிக்கை படிவத்தை பயன்படுத்தினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். நாம் என்ன காரணங்களுக்காக பணம் எடுக்க விரும்புகிறோமோ அந்த படிவத்தைக் கொடுக்கப்படவில்லை என்றாலும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம்.
  • நீங்கள் பணியாற்றும் அலுவலகம் நீங்கள் வேலையை விட்டு விலகும்போது அதனை பிஎஃப் கணக்கில் குறிப்பிட வேண்டும். அப்படி செய்ய தவறினாலும் உங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். .
  • சில நேரங்களில்  இபிஎஃப்ஓ போர்டலில் உள்ள தொழில்நுட்ப பிழை காரணமாகவும் சமயங்களில் பிழை ஏற்படலாம்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு செய்ய வேண்டியவை


கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற தளத்துக்கு சென்று  Track Claim Status என்பதைக் கிளிக் செய்யவும், Rejection Reason செலக்ட் செய்து அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளவும். ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். UAN portal வழியாக உங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களை திருத்தவும். வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டுமெனில் Manage  – KYC பகுதியில் புதிய விவரங்களை பதிவு செய்யவும்.  உங்கள் Employer-ஐ அணுகி அவர்கள் உங்கள் “Date of Exit” மற்றும் மற்ற தேவையான விவரங்களை பதிவு செய்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள்.