Credit Card : இது தெரியாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தாதீர்கள்.. ரிவார்டு பாயிண்ட்ஸ் சிறப்பு அம்சங்கள் இதோ!

Credit Cards Reward Points Benefits | இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். அதில் கேஷ்பேக், வவுச்சர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், கிரெடிட் கார்டு ரிவார்ட் பாயிண்ட்களை முழுமையாக மற்றும் சிறப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Credit Card : இது தெரியாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தாதீர்கள்.. ரிவார்டு பாயிண்ட்ஸ் சிறப்பு அம்சங்கள் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Apr 2025 22:05 PM

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகளை (Credit Card) வழங்குகின்றன. இந்த கிரெடிட் கார்டுகள் ஏராளமானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. காரணம், இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்துவிட்டு, பின்பு செலவு செய்த தொகையை மாத தவணை (Monthly Investment) மூலம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. குறைவான வருமான, நிதி நெருக்கடி உள்ள நபர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. அவர்கள் தங்களிடம் பணம் இல்லாத போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் அதற்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துகின்றனர். இது அவர்களின் நிதி சுமையை குறைக்க பெரும் பங்கு வகிக்கிறது.

பல சிறப்பு அம்சங்களுடன் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள்

கிரெடிட் கார்டை பொருத்தவரை அதில் பல வகைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இந்த கார்டுகள் அனைத்தும் குறிப்பிட்ட தேவைகளுக்காக வழங்கப்படுகின்றன. அதாவது, கிரெடி கார்டுகளை பொருத்தவரை சில கார்டுகள் வங்கிகள் மூலம் வழங்கப்படும். சில கார்டுகள் ஏதேனும் நிறுவங்கள் மூலம் வழங்கப்படும். குறிப்பாக விமான நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் வங்கிகள் உடன் இணைந்து கிரெடிட் கார்டுகளை வழங்கும். இந்த கிரெடிட் கார்டுகளுக்கு விமானத்தில் பயணிக்க தனிச்சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.

பல கார்டுகளை பயன்படுத்துங்கள்

கிரெடிட் கார்டுகளை பொருத்தவரை பல அம்சங்களை கொண்ட பல வகையாக கார்டுகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், பல கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் அதிக பலன்களை பெற முடியும். அதாவது, ஒவ்வொரு கிரடிட் கார்டும் தனி சிறப்புகளை கொண்டு இருக்கும். சில கிரெடிட் கார்டுகள் வவுச்சர் பாயிண்டுகளை (Voucher Points) வழங்கும், சில கிரெடிட் கார்டுகள் தள்ளுபடிகளை (Offers) வழங்கும். எனவே, பல வகையான கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் அனைத்து விதமான ரிவார்டு பாயிண்ட்களையும் (Reward Points) பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கிரடிட் கார்டுகளில் கிடைக்கும் கூடுதல் சிறப்புகள்

பெரும்பாலான் கிரெடிட் கார்டுகளில் கேஷ்பேக் (Cashback), ரிவார்டு பாயிண்ட்ஸ் மட்டுமன்றி காம்ப்ளிமென்ட்ரி (Complementary) வழங்கப்படுகிறது. குறிப்பாக விமான சேவைகள், பயண வவுச்சர்கள், உணவு சலுகை, திரைப்பட சலுகை, உள்ளிட்ட பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். இன்னும் சில கிரெடிட் கார்டுகள் சில அசத்தலான சலுகைகளை வழங்குகிறது. அதாவது, பெரிய உணவகங்களில் மெம்பர்ஷிப் (Membership), விமான நிலைய சந்திப்பு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கும். இவற்றின் மூலம் பல சிறப்பான அனுபவங்களை பெற முடியும். எனவே கிரெடிட் கார்டுகளை வாங்குவதற்கு முன்பாக அதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பதை தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.