Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி? கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Public Provident Fund: பப்ளிக் புரொவிடன்ட் ஃபண்ட் திட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இணைந்து 17 ஆண்டுகளில் ரூ.1 கோடி லாபம் பெறலாம். இந்த திட்டத்தில் சேமிப்பது எப்படி மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.

PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி? கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 19 Apr 2025 17:56 PM

பப்ளிக் புரொவிடென்ட் ஃபண்ட் (Public  Provident Fund) என்ற பொது வைப்பு நிதி மத்திய அரசு வழங்கும் நீண்ட கால முதலீட்டு திட்டம். இதன் திட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பாக சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.500 முதல் 1,50,000 வரை சேமிக்கலாம். 15 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். தேவைக்கு ஏற்ப கூடுதலாக 5 ஆண்டுகள் நீடித்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 7.1 சதவிகித வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் பிரிவு 80சி கீழ் வருமான வரி விலக்கு (Income Tax Return) கிடைக்கும். முடிவில் கிடைக்கும் தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை. மேலும் திட்டத்தில் இணைந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட அளவு பணம் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வூதியம் என நீண்ட கால பொருளாதரா தேவைகளுக்கு இந்த திட்டம் பெரிதும் கைகொடுக்கிறது. மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக சேமிக்கலாம்.

நீண்டகால நிதி பாதுகாப்பு மற்றும் வருமான வரி சலுகைகள் தேவைப்படுகிறவர்களுக்கு இந்த பப்ளிக் புரொவிடென்ட் ஃபண்ட் என்பது ஒரு நம்பத்தகுந்த முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. குறிப்பாக, தம்பதிகள் இதைச் சரியாகப் பயன்படுத்தினால், 17 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை சேமிக்க முடியும் அது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?

ஒரு நபர் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் தற்போது 7.1 சதவிகிதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. தம்பதிகள் இருவரும் தனித்தனி பிபிஎஃப் கணக்குகளில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதலீடு செய்யலாம். மேலும் இந்த வட்டி விகிதம்  தொடரும் பட்சத்தில், 17 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை சேமிக்கலாம் என்பது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்யும் போது அதற்கு வட்டி கிடையாது. அதே போல நாம் முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் வட்டிக்கும் வரி கிடையாது. அதேபோல திட்டத்தின் முடிவில் நாம் பெறும் மொத்த தொகைக்கும் வரி கிடையாது. இதனால் சேமிப்பதற்கு இது சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பிபிஎஃப் என்பது என்பது குறுகிய கால இலாபம் நோக்கில் சேமிப்பவர்களுக்கு ஏற்றது அல்ல. இது நீண்டகால முதலீடுகளுக்கே ஏற்றது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கிடைக்கும் வட்டியால், ஒரு சிறிய முதலீடுகள் கூட பல ஆண்டுகளில் பெரிய தொகையாக மாறும். இதன் காரணமாக நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நமது எதிர்கால தேவைகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். இது அரசால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான திட்டம். சந்தை நிலவரம், ஷேர் மார்க்கெட் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இதை பாதிக்காது. எனவே, இது அபாயம் இல்லாத முதலீடாக கருதப்படுகிறது.

இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் சேமிக்க வேண்டும். கூடுதலாக 5 ஆண்டுகள் திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம். மேலும் திட்டத்தில் இணைந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக பெற்றுக்கொள்ளலாம்.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...