வரலாறு காணாத உச்சம்.. ரூ.70 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ஒரு கிராம் இவ்வளவா?

Chennai Gold Rate : தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்த சூழலில், 2025 ஏப்ரல் 12ஆம் தேதியின்படி, தங்கம் விலை 70,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பது சாமானியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வரலாறு காணாத உச்சம்.. ரூ.70 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ஒரு கிராம் இவ்வளவா?

தங்கம் விலை

Updated On: 

12 Apr 2025 11:25 AM

சென்னை, ஏப்ரல் 12:  தங்கம் விலை (Chennai Gold Rate) வரலாறு காணாத அளவில் உச்சமடைந்து வருகிறது. 2025 ஏப்ரல் 12ஆம் தேதியின்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 70,000 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் தொடர்ந்து குறைந்த வந்த நிலையில், இந்த வாரம் அதற்கு நேர் மறாக, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ரூ.70 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.3,000க்கு மேல் உயர்ந்தது. 2025 ஏப்ரல் 11ஆம் தேதியின்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,500 வரை உயர்ந்தது. இதனால், நேற்று தங்கம் விலை சவரனுககு ரூ.69,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இது தங்கம் விலை ரூ.70,000-த்தை கடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அதன்படியே, 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதாவது, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.70,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு  25 உயர்ந்து, ரூ.8,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வெள்ளி விலை ரூ. 2 காசுகள் உயர்ந்து, ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் இவ்வளவா?

நாளுக்கு நாள் தங்கம் விலை உய்ர்ந்து வருவது நடுத்தர மக்களுக்கு நகை வாங்குவது எட்டாங்கனியிக மாறி வருகிறது.  இதனால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.  அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து  உயர்ந்து வருகிறது.

எனவே, இந்த ஆண்டுக்குள் சவரனுக்கு தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, தங்கத்தை முதலீடு செய்பவர்கள் இப்போதில் இருந்து அதிகமாக செய்யுங்கள் என அறிவுறுத்தி வருகின்றனர்.

பொருளாதார நிச்சயமற்ற சூழல், புவிசார் அரசியல், பணவீக்கம் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக உள்ளன. அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமரி வரியை விதித்தார். இந்தியா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இறக்குமரி வரியை உயர்த்தினார்.

ஆனால், இதனை அமல்படுத்தாமல் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார். இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதோடு இல்லாமல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதற்கிடையில், அடுத்த 5 ஆண்டுகளில் 36 சதவீத வரை தங்கம் விலை குறையலாம் எனவும்  வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.